வேறு ரூட்டில் லிங்கு! வெகுண்டெழுந்த விஷால்!

0

இன்னும் பத்து வருஷம் கழித்து ‘சண்டக்கோழி’ என்ற தலைப்பை சொன்னாலும், சடக்கென முழித்துக் கொள்கிற அளவுக்கு அப்படம் டாப்போ டாப்! முரட்டுக்குத்து மாதிரியான படங்களுக்கே செகன்ட் பார்ட் பண்ணலாமா என்று யோசிக்கும் போது, சண்டக்கோழிக்கு என்ன குறைச்சலாம்?

ஒரு சுபயோக சுபதினத்தில் சென்னையில் பிரமாண்ட செட் போட்டு படத்தை துவங்கினார்கள். தான் புடுங்கறதெல்லாம் தேவையில்லாத ஆணிதான் என்பதை உணராத விஷாலும், ஒவ்வொரு மணித்துளியையும் தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கே செலவிட, பட்ஜெட் ஏறியதே ஒழிய படம் நகர்ந்த பாடில்லை.

இதுவே பழைய பன்னீர் செல்வமாக இருந்தால் பிஸ்டலை உருவலாம். லிங்குவின் நிலைமையே லிமிடட் சப்பாத்தியாக இருக்கும் போது என்ன செய்வதாம். அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

நடுவில் இவர் சண்டக்கோழி 2 படத்தின் ஷுட்டிங்கை கிடப்பில் போட்டதில் கடுப்பான லிங்கு, நான் என் அண்ணன் பையனை வச்சு சின்ன பட்ஜெட்ல ஒரு படம் எடுத்துட்டு வந்திடுறேன். அதற்கப்புறம் சண்டக்கோழி 2 ஷுட்டிங்கை வச்சுக்கலாம் என்று கிளம்ப… இதென்னடா பிரச்சனையா போச்சே என்று நினைத்தாராம் விஷால்.

ஒரு கட்டத்தில் சங்கத்திற்காக மெனக்கெடறது சொந்த முன்னேற்றத்துக்கே சங்கு ஊதிக்கிற மாதிரிதான் என்பதை உணர்ந்த விஷால், இப்போதுதான் தனது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். சங்கம் பக்கம் முன்பு போல செல்வதும் இல்லை. கட்…

மீண்டும் ஜரூராக படப்பிடிப்பை துவங்கிவிட்டார். அதற்கேற்றார் போல இரும்புத்திரை படமும் செம கலெக்ஷன் என்பதால், பணம் புரட்டுவதிலும் நோ சிக்கல். அப்பறம்?

கோழி 2 கும்முன்னு நடக்க ஆரம்பிச்சுருக்கு!

இது பீஸ் லெஸ் பிரியாணியா, வயிறுக்கு பீஸ் புல் பிரியாணியா என்பது போக போகதான் தெரிய வரும்!

Leave A Reply

Your email address will not be published.