விஷால் இன்னொரு நாஞ்சில் சம்பத்தா?

0

உணர்ச்சிவசப்பட்டு பேசுவதில், இன்னொரு நாஞ்சில் சம்பத்தோ என்று அஞ்ச வைக்கிறார் விஷால். துப்புனா துடைச்சுக்குவேன் என்று நாஞ்சில் சொன்னபோது நாடே சிரித்தது. ஆனால், யாரு பிரச்சனை பண்ணினாலும் கண்டுக்கவே மாட்டேன் என்று விஷால் நடப்பது அதைவிட கொடுமை என்று அலறுகிறார்கள் இங்கே.

விடிந்தால் விஷால் குறித்த பஞ்சாயத்தோடுதான் கண்விழிக்கிறது அவருக்கு எதிர் கோஷ்டி. அப்படி சமீபத்தில் ஒன்று கூடிய அவர்கள், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மீது அடுக்கடுக்கான ராக்கெட்டுகளை ஏவி விட்டதில் அதிர்ச்சி துளியும் இல்லை. இவர்களெல்லாம் சும்மாயிருந்தால்தான் அதிர்ச்சி. ஆனால், அடிக்கடி கடிக்கிற கொசு, திடீரென தன் பல்லை அப்படியே பெயர்த்து கடித்த இடத்திலேயே செருகிவிட்டு போனால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது இவர்களின் ஒரு குற்றச்சாட்டு. இதற்கெல்லாம் வலிக்காதது போல விஷால் நடித்தால், அது அநியாயத்திலும் அநியாயம்!

சரி, அது என்ன குற்றச்சாட்டு?

‘எவ்வளவு பெரிய படம் வெளியானாலும் 220 தியேட்டருக்கு மேல போடக் கூடாது. மீதி தியேட்டர்களில் சின்னப்படம் வந்தே ஆகணும். அப்ப காலா வந்தாலும் சரி. இதுதான் ரூல்’ என்று சந்திரகுப்த மவுரியரின் வாள் போல, வீசிவிட்டு சென்றார் விஷால். அட நிஜம்ங்களா? அப்படியெல்லாம் கூட செஞ்சுருவீங்களா? என்று வாயடைத்துப்போன பிரஸ், விஷாலின் உறுதி கண்டு வியந்து வியந்து நியூஸ் போட்டது.

எல்லாம் அம்பேல்! சமீபத்தில் திரைக்கு வந்த விஷாலின் இரும்புத்திரை படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 370 தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறதாம். இதைதான் குற்றச்சாட்டாக வைக்கிறது அவருக்கு எதிர் கோஷ்டி.

நீங்க போட்ட ரூல்சை நீங்களே மீறலாமா மிஸ்டர் விஷால்?

Leave A Reply

Your email address will not be published.