பூட்டுப் போட்டவர்களுக்கு சப்போர்ட்! உடைக்கப் போன விஷாலுக்கு விலங்கு! பலே போலீஸ்… பலே சட்டம்!

1

விஷால் மீது லட்சத்தியொரு குறைகள் இருப்பதாக உதட்டை பிதுக்குகிறார்கள் சங்கத்தில். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பை வேலை செய்ய விடாமல் அலுவலகத்துக்கு பூட்டு போட்றீங்களே, அது நியாயமா? என்று நடுநிலையாளர்கள் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாங்க வந்தால் நல்லது நடக்கும் என்று கடந்த பல வருஷங்களாவே பூச்சாண்டி காட்டி வரும் தலைவர்கள் இப்போதும் கிளம்பியிருப்பதால், சங்கம் நாசமா போவட்டும் என்று வீட்டிலேயே உட்கார்ந்து சாபம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதே நடுநிலை தயாரிப்பாளர்கள். நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் இரண்டு அலுவலகங்களுக்கு முன் திரண்ட அதிருப்தியாளர்கள், அவ்விரு சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போட்டுவிட்டு போய்விட்டார்கள். அப்போதும் அங்கே போலீஸ் இருந்தது.

ஆனால் அதே பூட்டை உடைக்கப் போன விஷால் ஆதரவாளர்களை கைது செய்திருக்கிறது அதே போலீஸ். இந்த நடுநிலை(?) பலரையும் வியக்க வைத்திருப்பததான் ஆச்சர்யம். இந்த பூட்டு உடைப்பு சம்பந்தமான வாக்குவாதத்தை அடுத்து விஷால் அதிரடியாக கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டுவிட்டார்.

அதிருப்தியாளர்கள் அனைவரும் முதல்வரை சந்தித்திருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின் வீறு கொண்ட புலியாக கிளம்பி அரசியல் கருத்துக்களை உதிர்த்துவரும் விஷால், அதிமுக வுக்கு எதிராக ஆர்.கே.நகரில் நின்ற கோபத்தையும் இப்போது தணித்துக் கொள்ள நினைக்கிறதாம் ஆளுங்கட்சி.

அப்ப உடைச்சவங்களுக்கு கொண்டாட்டம். தடுக்கப் போனா திண்டாட்டம்!

நடத்துங்க நடத்துங்க…

1 Comment
  1. Sanmugam says

    Dhool. Jail kaithigal sanga thalaivar aagi, nallathu (fraud) pannattum.

Leave A Reply

Your email address will not be published.