தடை! அதை உடை! தொடர்ந்து முன்னேறும் விஷால்! லேட்டஸ்ட் வெற்றி இதுதான்…

0

‘எவ்ளோ பெரிய வலை போட்டாலும் தப்பிச்சுடுறானேடா…’ என்று கடைவாய் பல் நொறுங்க நொறுங்க கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது விஷாலின் எதிர்கோஷ்டி. அதற்காக இதோடு மூட்டையை கட்டிக் கொண்டு அவர்கள் ஓடப் போவதும் இல்லை. விஷாலின் போராட்டம் ஓயப் போவதும் இல்லை. இருந்தாலும், வெற்றி முகத்துடன் பிரஸ்சை சந்தித்தார் விஷால். நடிகர் சங்க கட்டிடம் எழுப்புவதில் எவ்வித தடையும் இல்லை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்துதான் இந்த கொண்டாட்டம்.

விஷாலின் சம்பளத்திற்கு நாள் கணக்கு போட்டால் கூட, தினந்தோறும் லட்சங்களில் சம்பளம் வரும். அப்படியிருந்தும் இழப்பை பொருட் படுத்தாமல் சினிமா பிழைப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கிறார் அவர். நடிகர் சங்க கட்டிடம் கட்டிவிட்டுதான் திருமணம் என்று அறிவித்தாலும் அறிவித்தார். அவ்வையாருக்கு பேன்ட் போட்ட மாதிரி ஆயுள் முழுக்க பேச்சுலரா திரிய வேண்டியதுதான் என்று கொக்கரித்தது எதிர் கூட்டம். விதவிதமாக வழக்குகளும் தொடர்ந்தார்கள். எல்லாவற்றுக்கும் முடிவு வந்தது நேற்று. அதுதான் இந்த நல்ல முடிவு.

“2018 ஆகஸ்ட்டில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறக்கப்படும். முதல் நிகழ்ச்சியே விஷாலின் கல்யாணம்தான்” என்று அறிவித்தார் பொன்வண்ணன். “ஆர்யா கல்யாணத்துக்கு தேதி கேட்டால் கூட சுலபமா கிடைக்குமான்னு தெரியல” என்று ஜோக் அடித்தார் விஷால்.

இனிமேலாவது விஷாலை வேலை செய்ய விடுங்கப்பா…

Leave A Reply

Your email address will not be published.