கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா! மத்திய அரசுக்கு விஷால் கோரிக்கை!

1

இன்று சென்னை வந்திருந்தார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு. தமிழ்நாட்டுக்கும் நாயுடுவுக்கும் எப்போதும் ஒரு ஒட்டுறவு உண்டு. ஜெ. மறைவுக்கு வந்த மத்திய அமைச்சர்களிலேயே அதிக நேரத்தை செலவிட்டவர் அவர் மட்டும்தான். நினைத்தால் நடிகர்கள் அவரை சந்தித்துவிட முடிகிற அளவுக்கு இலகுவாக இருக்கிறார். இன்று நேற்றல்ல. கடந்த பல வருடங்களாகவே தமிழ்நாட்டுடன் தன்னை இணைத்துக் கொள்கிறவராச்சே? இன்று ஸ்பெஷலாக அவரை சந்தித்தார்கள் நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்.

வெற்றி பெற்று வந்த நாளிலிருந்தே இந்த திருட்டு விசிடிக்கு ஒரு முடிவு கட்டணும்ப்பா என்று ராப் பகலாக யோசித்துக் கொண்டிருக்கும் விஷால் டீம், வெங்கய்யாவிடம் ஒரு கோரிக்கை வைத்தது. திருட்டு விசிடிக்கு பெரும் காரணியாக இருப்பது டவுன்லோட்தான். இதை மத்திய அரசு நினைத்தால் கட்டுப்படுத்தலாம். பிராண்ட்பேன்ட் மூலம் டவுன்லோட் செய்யும் இந்த வசதிக்கு ஒரு லாக் போட்டுத் தர வேண்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கை.

இந்த சந்திப்பின்போது கமலும் உடன் இருந்ததால், அக்கறையாக கேட்டுக் கொண்டிருக்கிறார் வெங்கய்யா நாயுடு. அப்படியே இன்னொரு கோரிக்கையும் வைக்கப்பட்டது நடிகர் சங்கம் சார்பில்.

செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு மத்திய அரசு ஒரு விழா எடுக்க வேண்டும் என்பதுதான் அது. கடந்த சில மாதங்களாகவே கட்சிக்குள் ஐக்கியமாகும்படி கமலையும் ரஜினியையும் வற்புறுத்தி வரும் பா.ஜ.க இந்த சின்ன விஷயத்தை செய்யாமலா இருக்கும்?

நாள், இடத்தை முடிவு பண்ணுங்க. மோடியே வருவார்! நடிகர்களை பார்ப்பதை விட வேறு என்ன பெரிய வேலை இருந்திருக்கிறது அவருக்கு?

1 Comment
  1. விஜய் says

    தமிழக விவசாயிகள் பிரச்சனையைவிட, கமலுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற சினிமாக்காரங்க பிரச்சனை ரொம்ப முக்கியம்.

Leave A Reply

Your email address will not be published.