வரலட்சுமிதான் ஃபர்ஸ்ட்! சந்தோஷக்கோழி விஷால்!

1

சண்டக்கோழி 2 ஃபைட்டுக்கு தயாராகிவிட்டது. அக்டோபர் 18 ந் தேதி ரிலீஸ். முன்னதாக தோள் மீது இருந்த பாரங்களையும் சாதுர்யமாக இறக்கி வைத்துவிட்டாராம் விஷால். கடைசி நேர கலாட்டாக்கள், களேபரங்கள் போன்றவை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதால், கோழி கூவியே தீரும் என்பதில் நோ டவுட்.

இப்படம் குறித்து பேசுவதற்காக தன் டீமோடு வந்திறங்கினார் விஷால். மற்றவர்கள் வருவதற்கு முன்பே வந்து காத்திருந்தார் வரலட்சுமி. (ஆமாம்… ரொம்ப வருஷமாகவே காத்திருக்கிறாரே விஷால்?) அவரை குளிர்விக்க சொன்னாரோ, அல்லது நிஜமாகவே அப்படியா தெரியவில்லை. இந்தப்படத்தில் யாருக்கு பெயர் கிடைக்கும் என்று வரிசைப்படுத்திய விஷால் முதலில் குறிப்பிட்டது வருவைதான். ‘தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது உங்க மனசில் முதலில் நிறைவது வரலட்சுமிதான். பிறகு கீர்த்தி சுரேஷ். கடைசியாகதான் நான்’ என்றார்.

ரிலீஸ் தேதியை சில மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார்கள். அதற்கப்புறம் ஷுட்டிங் தொடர்ந்தது. ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு அந்த தேதிக்குள் படத்தை கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். அதை நல்லா அனுபவிச்சுட்டேன் என்ற விஷாலை சீரியஸ் மூடுக்கு இழுத்தது பிரஸ்.

சின்மயி- வைரமுத்து விவகாரம் கேள்வியாக வெடிக்க, பாலீஷ் ஆக ஒளியவா முடியும்? இருந்தாலும் சோஷியல் மீடியாவில் இதுபற்றி கருத்து சொல்லாமல் நேர்ல சொல்லலாம்னு இருந்தேன் என்றார் விஷால். இந்த மாதிரி பெண்களுக்கு அநீதி நடந்த உடனே எங்களுக்கு போன் செய்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் காலம் கடந்து புகார் அளித்தால், இது ஒன்றும் போலீஸ் ஸ்டேஷன் இல்லையே என்றார். கடைசியாக அவர் சொன்னதுதான் நடக்கவே நடக்காத சமாச்சாரம். இதற்கு முன்பும் பலமுறை இப்படி அறிவித்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கப் போனவர்கள்தான் இவர்கள். சரி… அது என்ன அறிவிப்பு?

இதுபோன்ற பாலியல் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்கப் போகிறாராம் விஷால்.

ரமணா, உதயா, நந்தா தானே அவங்க மூணு பேரும்? நல்லாயிருக்கு விஷால் உங்க சப்பக்கட்டு!

1 Comment
  1. Subu says

    I think you didn’t heard his announcement. He said that Febsi, Actors Association & Producers association are decided to form a 3 team members for it.

Leave A Reply

Your email address will not be published.