விஷால் வேணாம்! சிவகார்த்திகேயன் ஓகே! தெறிக்கவிட்ட இயக்குனர்!

1

‘அப்கோர்ஸ்… இருக்க வேண்டியதுதானே?’ என்று இந்த நியூசை எடுத்துக்கலாம். ஆனால் அவ்வளவு அலட்சியமாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. ஏன்?

ஏன்னா… இது செய்நன்றி மறந்த செயலாச்சே?

விஷாலுக்கு வெகு காலம் கழித்து மானத்தை காப்பாற்றிய படம் என்றால் அது இரும்புத்திரைதான். தமிழில் மட்டுமல்ல… தெலுங்கிலும் இப்படம் ஹிட். வெற்றிக்கப்புறம் வெறி வருமல்லவா? இவ்வளவு காலம் நம்ம புத்தியில்லாம இருந்திட்டோமோ என்கிற டவுட் வருமல்லவா? விஷாலுக்கும் வந்தது. தம்பி… புத்திசாலி டைரக்டரா இருக்கே. வேணும்னா இரும்புத்திரை பார்ட் 2 பண்ணுவோமா என்றாராம் விஷால்.

“என்னை டைரக்டரா கமிட் பண்ணி மூணு வருஷம் காக்க வச்சிங்க. சம்பளமும் பெரிசா இல்ல. முதல் படமே ஹிட்டுன்னா இன்டஸ்ட்ரி விட்ருமா? நீ நான் னு கிளம்பி வர்றாங்க. நல்ல சம்பளம் வாங்கி, நிம்மதியா ஒரு படம் பண்ணிட்டு வர்றேன்” என்று மனசு நினைக்குமல்லவா?

மனசு சொல்வதையே கேட்க ஆரம்பித்துவிட்டார் மித்ரன். சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொன்னாராம். அங்கு க்ரின் சிக்னல் போட்டுவிட்டார்கள். நல்ல வெயிட்டான சம்பளமும் கூட. றெக்கை முளைச்ச கிளி பறந்து போயே போச்!

நாம வளர்த்த காளைதானேன்னு கொம்பு முனையில உட்கார முடியாதுல்ல? ஆஃப் ஆகிவிட்டாராம் விஷால்!

1 Comment
  1. seelan says

    SUPER…நாம வளர்த்த காளைதானேன்னு கொம்பு முனையில உட்கார முடியாதுல்ல?

Leave A Reply

Your email address will not be published.