அவர் இளையதளபதின்னா இவர் புரட்சித் தளபதியா? விஷால்… நீ ஒரு விஷம்! ஏறியடிக்கும் தாணு!

1

வரவிருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் விஷால். அவருடன் ஞானவேல்ராஜா, பிரகாஷ்ராஜ், சுந்தர்சி, மிஷ்கின், ஆர்யா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது போட்டி குறித்து பேட்டியளித்தார்கள். அப்போது அவர்கள் பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இன்று நடிகர் சங்கத்தில் கூடிய தயாரிப்பாளர் தாணு, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ராதாகிருஷ்ணன், டைரக்டர் சேரன், தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி உள்ளிட்ட ஏராளமானவர்கள் விஷாலுக்கு எதிராக கோஷமிட்டார்கள். “பொட்டை விஷாலே வெளியே வா…” என்றெல்லாம் அங்கு கூடியிருந்த துணை நடிகர்கள் கோஷமிட்டார்கள்.

கூட்டத்தில் மைக் பிடித்த தாணு பேசியதாவது-

‘தம்பி விஷால்…. தயாரிப்பாளர்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்… அவர்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது? 1200 உறுப்பினர்களுடன் மிக மரியாதைக்குரிய அமைப்பாக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சிக்க நீ யார்? என்ன தகுதி இருக்கிறது? உன்னால் உன் தந்தை தயாரிப்பாளர் ஜிகே ரெட்டிக்கே அவமானம். உன்னால் எத்தனை தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள்… நினைத்துப் பார்த்ததுண்டா?

யாரிடமும் கை நீட்டி நிற்காத ‘செல்லமே’ படத் தயாரிப்பாளர் உன்னால் பட்ட கஷ்டங்கள் நினைவில்லையா? மத கஜ ராஜா என்ற படத்தை எடுத்துவிட்டு நடுத் தெருவுக்கு வந்துவிட்ட ஜெமினி நிறுவனத்தை நினைத்துப் பார்…

இளையதளபதி என விஜய்க்குப் பட்டம் சூட்டினால், நீ புரட்சித் தளபதி என்று போட்டுக் கொள்கிறாய்… அவர் புலி என்று படமெடுத்தால், நீ பாயும் புலி என்று படமெடுக்கிறாய்.. அவ்வளவு விஷமத்தனம்… கெட்ட எண்ணம்.

விஷால்… நீ ஒரு விஷம்! என்று ஆவேசப்பட்டார்.

1 Comment
 1. Rajii says

  Vishal enga thayarippalar sangarthai vimarsiththar, nirvakikalai than vimarsiththar.
  Adei poi therthalil vellura velaiyai parungo. Enga antha ore thamilan Suresh kamatchi FB yil thittalaya.
  Ellam oru mentals. Ivargalukku ellam oru sangam.
  Nettu gnanavelraja pesiyathu mattume thappu, Maththapadi ellam okay. Gna kavanamaka pesungo neenga than anga pirasanai
  Therthalil nikkamudiyama vilakkinanga ippa kaththi parkiranga.
  Ean vishal oda nikkiravangala vimarsikka mudiyatha? Payama??
  Dhanukku kamal mela kandu athuvum oru reason.
  Onnu mattum unmai ivanga than vishalai periyal aakiranga.

Leave A Reply

Your email address will not be published.