24 மணி நேரமும் ஜிம் பாய்ஸ் பாதுகாப்புடன் விஷால்! திடீர் உஷார் ஏன்?

0

இப்போதெல்லாம் பாதுகாப்பாளர்கள் புடை சூழதான் வருகிறார் விஷால். எப்போது நடிகர் சங்கத்தை கைப்பற்ற களம் இறங்கினாரோ, அப்போதிலிருந்தே தொடரும் மிரட்டல்கள்தான். ஆனால் அப்போதெல்லாம் பாதுகாப்புக்கு தன்னை சுற்றி ஆள் வைத்துக் கொள்ள விரும்பாத விஷால், இப்போது மட்டும் ஜிம் பாய்ஸ்களை துணைக்கு வைத்துக் கொள்வது ஏன்? யாரெல்லாம் அவரை மிரட்டுகிறார்கள்? போலீஸ் பாதுகாப்பை கேட்டுப் பெறலாமே? என்கிற ஏராளமான கேள்விகள் இருந்தாலும், விஷால் அஞ்சும் தற்போதைய த்ரட்டன், அந்த இனிஷியல் நடிகர்தான் என்கிறது வட்டாரம். இவ்வளவு களேபரங்கள் தன்னை சுற்றி இருந்தாலும், சிலபல அதிரடிகளை அரங்கேற்றுவதில் எப்போதும் கிங்தான் நம்ம விஷால்.

இப்போது அவர் வைத்திருக்கும் கோரிக்கை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஆட்டோக்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே. ஏன்?

சமீபத்தில் ஒரு ஆட்டோவில் பயணம் செய்தாராம் விஷால். அண்ணே… படமெல்லாம் பார்த்தீங்களா? எது நல்லாயிருக்கு? என்று லேசு பாசாக பேச்சுக் கொடுத்தவருக்கு ஷாக். “எங்க சார் படம் பார்க்க முடியுது? முன்னெல்லாம் நம்ம ஆட்டோவுல சவாரி வர்றவங்க எந்தப்படம் நல்லாயிருக்குன்னு கேட்பாங்க. நானும் சொல்வேன். அவங்களும் நம்பி குடும்பத்தோட போவாங்க. ஆனால் இப்ப கொஞ்ச நாளா எங்க ஆட்டோவை எந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்குள்ளேயும் அனுமதிக்கறது இல்ல. நாங்களும் தியேட்டருக்கு போய் படம் பார்க்கறதை விட்டுட்டோம்” என்றாராம்.

பேரதிர்ச்சிக்குள்ளான விஷால், கத்தி சண்டை படம் வெளியாகும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஆட்டோக்களை அனுமதிக்கணும் என்றொரு கோரிக்கையை வைத்திருக்கிறார். வழக்கம்போல போராடத்திற்கு பின்புதான் பூ பூக்குமோ என்னவோ?

Leave A Reply

Your email address will not be published.