கார்த்தி விஷாலின் கருப்பு வெள்ளை! கடும் எரிச்சலில் பிரபுதேவா! தவிக்கும் தயாரிப்பாளர்!

0

சம அந்தஸ்துள்ள இரண்டு ஹீரோக்கள் ஒரே படத்தில் நடிப்பது ஒரு விசேஷம் என்றால், அதில் வரும் சம்பளத்தை அப்படியே பொதுநலத்திற்காக அவ்விருவரும் வழங்கிவிட்டால், அதுதான் பெரிய பெரிய விசேஷம். அப்படிதான் கார்த்தியும் விஷாலும் இணையும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தின் சம்பளத்தில் இருவரும் ஐந்து ஐந்து கோடியை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக வழங்கிவிட்டார்கள்.

ரசீது போட்டாச்சு. சரக்கு ரெடியாகணும்ல? அங்குதான் சிக்கலே!

இப்படத்தின் இயக்குனர் பிரபுதேவா, இது நாள் வரை நடத்திய ஷுட்டிங் வெறும் மூன்றே நாட்கள்தானாம். நான்காவது நாள் பொறுமையாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷை அழைத்தவர், “அண்ணே…தப்பா எடுத்துக்காதீங்க. எங்கிட்ட இந்தப்படத்திற்கான கதை இருக்கு. ஆனால் அது ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட்டா இல்ல” என்றாராம்.

“அடப்பாவிகளா, இவ்ளோ நாளு வழுக்கை மண்டைக்கா ‘டை’ அடிக்க கிளம்பினீங்க?” என்று உதடு வரை வந்த அதிர்ச்சியை உள்ளேயே போட்டு விழுங்கிய தயாரிப்பாளர், “ஒரு முடிவை சொல்லுங்க” என்று கேட்க, அங்குதான் பிரபுதேவாவின் பிக் பாஸ் மூளை வேலை பார்த்தது.

“இந்தப்படத்தை ரெண்டு பேர்ல யாராவது ஒருவரை வச்சு முடிச்சுருவோம். இன்னொரு ஹீரோவுக்கு இன்னொரு படம் எடுப்போம்” என்று சொல்ல, எதிர்ப்பக்கத்தில் படு அமைதி. ஆக, இந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்ளப் போகிற ஹீரோ விஷாலா, கார்த்தியா?

அடுத்த படம் என்றால், அது எப்போது? அதற்கும் இதே சம்பளமா, வேற லெவலா? இப்படி பல்வேறு கேள்விகள் சுற்றி சுழல, வெளிப்படையாக புலம்ப முடியாத நிலையிலிருக்கிறாராம் ஐசரி.

மாவே இல்லாம முறுக்கு சுடவும், மலரே இல்லாம மாலை கட்டவும் பிரபுதேவா… உங்கள விட்டா ஆளே இல்ல போலிருக்கே?

Leave A Reply

Your email address will not be published.