சசிகலாவை டென்ஷன் படுத்திய விஷால்!

1

சில விஷயங்களில் விஷால் பிடிவாதக் காரர்தான். அதில் சில நல்ல விஷயங்களாகவும், சில பிரயோஜனமில்லாத விஷயங்களாகவும் இருக்கும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அவர் செய்தது நல்ல விஷயமா, அல்லது… மிக நல்ல விஷயமா? என்பதை பொதுவான கண் கொண்டுதான் நோக்க வேண்டும்.

முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வமும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும், மற்றும் திரைப்பட சங்கத் தலைவர்களும் கலந்து கொண்ட விழா அது. அபிராமி திரையரங்கில் நடந்த அந்த விழாவில் மைக்கை பிடித்த விஷால், ஒவ்வொருவர் பெயரையும் சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார். முதல்வர் அவர்களே என்று கூறியவர், சசிகலா மேடம் அவர்களே… என்று அடுத்ததாக சொல்ல… அரங்கத்தில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், “சின்னம்மான்னு சொல்லு” என்று உரக்க குரல் எழுப்பினார்கள்.

இரண்டாம் முறையும் “சசிகலா மேடம்” என்றார் விஷால். அதற்கப்புறமும் கூச்சல் தொடர்ந்தது. எதற்கும் கவலைப்படாத விஷால், கடைசிவரை சின்னம்மா என்று உச்சரிக்காமலே தனது பேச்சை ஆரம்பித்து முடித்தார். எல்லாவற்றையும் மிக சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தாலும், கூர்மையாக உள் வாங்கிக் கொண்டிருந்தார் சசிகலா.

விஷாலின் துணிச்சல் சமயங்களில் கவனிக்கவும் வைக்கிறதே…!

 

1 Comment
  1. Dasan says

    Hatsoff Vishal

Reply To Dasan
Cancel Reply

Your email address will not be published.