டிசம்பரில் தனிக்கட்சி! விஷால் முடிவு?

0

விட்டால் பஞ்சாயத்து எலக்ஷனில் கூட விஷால் போட்டியிட்டு ஜெயிப்பாரு போலிருக்கே? என்று ஊர் உலகம் வேடிக்கையாக கலாய்க்கிறது. ஆனால் நம்ம கணக்கே வேற என்கிற அளவுக்கு ஜெயிக்கிற ஆசை வந்திருக்கிறது விஷாலுக்கு. அதற்கு தோதாக போட்டியிட்ட இரண்டு பெரிய தேர்தலிலும் இவருக்கே வெற்றித்தாய் மடி விரிக்க…. அரசியல் ஆசையால் கடத்தப்பட்டிருக்கிறார் விஷால்.

எந்தக்கட்சியிலும் சேரத் தேவையில்லை. நாமளே ஒரு கட்சி ஆரம்பிப்போம் என்கிற அளவுக்கு நிலைமை சீரியஸ் என்கிறது விஷால் வட்டாரம். வருகிற டிசம்பரில் விஷாலின் தலைமையில் அரசியல் மாநாடு கூடவிருப்பதாகவும், அதை எந்த மாவட்டத்தில் நடத்துவது என்பதுதான் இப்போதைய சீரியஸ் பேச்சு என்றும் தகவல்கள் உலா வருகிறது. அதே மாநாட்டில் தனது கட்சிப் பெயரை அவர் அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக கிசுகிசுக்கப்படுவதால், ‘சோழர் பரம்பரையில் மேலும் ஒரு மன்னர்’ என்று கல்வெட்டை அடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் திண்ணைப் புலவர்கள்.

ரஜினி வருவார். விஜய் வருவார் என்று பல்லாண்டுகளாக எதிர்பார்த்து வந்த மக்கள், திடீரென கமலும், விஷாலும் களமிறங்குவார்கள் என்கிற செய்தியை கேட்டு பேஸ்தடித்துப் போயிருக்கிறார்கள்.

யாரு, யாரு கூட கூட்டணி? யாருக்கு யார் சப்போர்ட்? என்பதெல்லாம் தேர்தல் கால தலைவலி என்றாலும், விஷாலும் கமலும் ஓரணியில் திரள்வார்கள் என்பது யூகம்!

பாட்டில்ல இருக்கிறது பச்சத்தண்ணியா, பக்காடியா ரம்மா? என்பது குடிக்கிற வரைக்கும் தெரியப் போறதில்ல. மக்களே… மவுத்தை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!

Leave A Reply

Your email address will not be published.