காக்க வந்தார்களா? தாக்க வந்தார்களா? விஷால் கூட்டமும், வில்லங்கமும்!

1

தமிழ் திரையுலகம் ‘ஸ்டிரைக்’ என்ற வார்த்தையே கேட்டாலே பதறும்! அன்றாடம் ‘பேட்டா’ வாங்குகிற அடிமட்ட தொழிலாளிகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனாலும், வலியில்லாமல் ஆபரேஷன் ஏது? என்று நினைத்த விஷால், அதற்கான அறிவிப்பை வெளியிட்டதுடன், அதற்கான காரண காரியங்களையும் தெளிவாக கூறியிருந்தார். விஷால் சொல்லி நாம் கேட்பதா என்று நினைத்த சிலர், அவருக்கு எதிராக காய் நகர்த்த… மொத்த நம்பிக்கையிலும் முட்டை கோஸ் விழுந்த மாதிரி ஆனது விஷாலுக்கு. இருந்தாலும் கடைசிவரை போராடியவர், கடைசி நேரத்தில் வேறு வழியில்லாமல் ஸ்டிரைக்கை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

இந்த பதவியும் வேகமும், முழுக்க முழுக்க தயாரிப்பாளர்களை வாழ வைக்கும் முயற்சிதான் என்று நிரூபிக்க நினைத்த விஷால், தனது அணி பதவிக்கு வந்த நாள் முதல் தற்போது வரை என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பட்டியலிட…. எதிர்பாளர்களே சற்று மிரண்டுதான் போனார்கள்.

 

க்யூப் கொள்ளையை தடுத்து நிறுத்த திட்டம், கேபிள் கொள்ளையை தடுத்து நிறுத்தத் திட்டம், தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையில் வெளிப்படை தன்மை, தயாரிப்பாளர் சங்கத்துக்கென தனி தொலைக்காட்சி, திருட்டு விசிடிக்கு எதிரான ஆக்ஷன் நடவடிக்கைகள் என்று அவர் வைத்த திட்டங்களும், அதற்கான முயற்சிகளின் தற்போதைய நிலைமை போன்றவற்றையும் விஷால் புட்டு புட்டு வைக்க… நேற்று பொதுக்குழுவுக்கு வந்த அத்தனை தயாரிப்பாளர்கள் கண்களிலும் நம்பிக்கை ஒளி வீச ஆரம்பித்தது.

நொட்டாரம் சொல்லாமல், குறுக்கே பூனைகளை ஏவி விடாமல் கொஞ்ச காலம் பொறுமை காத்தால், இதில் பாதியையாவது நிறைவேற்றித் தருவார் விஷால் என்று பேசிக் கொண்டே கூட்டம் கலைய…. எந்த நேரத்திலும் அசம்பாவிதம், அடிதடி, வெட்டுக்குத்து நிகழும் என்று காத்திருந்த போலீஸ் கூட்டமும் நிம்மதியாக வெளியேறியது.

இருந்தாலும் பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு வெளியே 100 அடி தொலைவில் நின்ற முரட்டு ஆசாமிகள்… யாருக்காக வந்தார்கள்? யாரை தாக்க நின்றார்கள்? அது விஷாலை காக்க வந்த கூட்டமா, அல்லது விஷாலுக்காக தாக்க வந்த கூட்டமா? என்கிற கேள்விக்கெல்லாம் இந்த நிமிஷம் வரைக்கும் விடையில்லை.

1 Comment
  1. Rajii says

    தாணு சரத்குமார் ராதாவி ..+++.. கூட்டு . அந்த படம் பார்த்தீங்களா எல்லாரும் ஒன்றாக திரைப்பட வர்த்தக சபை கூட்டம்.
    இவங்க எல்லாம் இவளவு காலம் பதவியில் இருந்தாங்க என்ன செய்தாங்க . இது தமிழ் நண்டு கதை தான்

Leave A Reply

Your email address will not be published.