கமல் விஷயத்தில் ஜகா வாங்கிய விஷால்!

1

சொல்லப் போனால் கமல்ஹாசானால் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்திற்குதான் தலைவலி. எப்படியாவது தாஜா செய்தாவது ‘கறக்க’ வேண்டியதை கறந்துவிட வேண்டும் என்று நினைக்கிறது சங்கம். ஆனால் தெளிவான குட்டையில் திடீர் பல்டி அடித்து அடித்து சலனத்தை ஏற்படுத்தி வருகிறார் கமல்.

கடந்த சில வாரங்களாகவே விஷால் மற்றும் திரைப்பட பிரமுகர்களின் இன்னொரு அலுவலகம் போலாகிவிட்டது அமைச்சர்களின் ஆபிஸ். (கேளிக்கை வரி, மானியம், விருதுகள் தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்காகதான் இந்த சிட்டிங்)

விஷால் போயிருந்த நேரத்தில் ஒரு முக்கியமான அமைச்சர் தன் குடும்பத்தை அங்கு வரவழைத்திருந்தாராம். ‘எங்க பேமிலி உங்க கூட போட்டோ எடுக்க ஆசைப்பட்டுச்சு’ என்று சொல்லி சிரித்திருக்கிறார் அமைச்சர். அந்தளவுக்கு நம்ம மேல அன்பா? என்று மகிழ்ந்த விஷால், அவர்களுடன் தனித்தனியாக செல்பி எடுத்துக் கொண்டாராம்.

கட்…! இந்த சந்தோஷங்களுக்குத்தான் திடீர் தடா விழுந்திருக்கிறது கமல் விஷயத்தால். கேளிக்கை வரி விஷயத்தில் தயாரிப்பாளர்களுக்கு நல்லதை நடத்திவிட வேண்டும் என ஒரே பிடிவாதமாக இருக்கும் விஷாலுக்கு, இந்த குழப்பம் ஒரு குட் டே பிஸ்கட் அளவுக்கு கூட பிரயோஜனம் தரப்போவதில்லை. கொடுத்த அடி போதாதென, “வரி விலக்கை பெறுவதற்காக எனது திரையுலக நண்பர்கள் அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள்” என்று வெளிப்படையாக கூறியிருக்கும் கமல், “ஒவ்வொருவரும் தானாக முன் வந்து லஞ்ச விவகாரத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து விஷால் கருத்தென்ன?

“ஒவ்வொருத்தருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. அதை தடுக்க முடியாது. ஆனால் அமைச்சர்கள் விஷயத்தில் கமல் சார் அப்படி பேசியிருக்க வேண்டிதில்லை”. விஷாலின் இந்த பதில், “உலை கொதிக்கிற நேரத்தில் கமல் சார் உள்ளே புகுந்து அடுப்பை அணைச்சுட்டாரே?” என்ற ரீதியில் அமைந்திருப்பதுதான் ஷாக்.

கமலா? சலுகையா? என்றால், கமல்தான் என்று வம்படியாக நிற்க சினிமாக்காரர்கள் ஒன்றும் ரோஷக்காரர்கள் அல்லவே?

1 Comment
 1. RAJ says

  ஒரே ஒரு மக்கள் நல விவகாரத்தை கையில் எடுத்து களத்தில் இறங்கி நீதி மன்றம்
  மூலமோ, அமைதி போராட்டங்கள் மூலமோ நடத்தி முடிக்கும் மன உறுதியோ,
  அல்லது தெளிவோ (இவர் பேசுவதிலேயே தெரியம் அது) இவருக்கு உள்ளதா
  என்பதை இங்கு உணர்ச்சிவயப்பட்டு பாராட்டி இருக்கும் தமிழ் மக்களிடமே
  விட்டுவிடுகிறேன். உங்களுக்கு இன்னும் ஒரு நடிகரின் AC ரூம் ரிமோட்
  கண்ட்ரோல் ஆட்சியை அனுபவிக்க ஆசை என்றால் உங்களின் தலை
  எழுத்தையும், அத்துடன் கூடிய உங்களின் முட்டாள் தனத்தையும் அந்த கடவுளே
  நினைத்தாலும் மாற்ற முடியாது. இன்னும் சில நாட்களில் 2G வழக்கில் தீர்ப்பு
  வரப்போகின்றது அப்போது பாருங்கள் இவரின் ஊழலுக்கு எதிரான வீரத்தை??

Leave A Reply

Your email address will not be published.