படங்களை வாங்கினாதான் கிளிப்பிங்ஸ்! சேனல்களுக்கு விஷால் சாட்டை!

0

விஷால் பொறுப்புக்கு வந்த பின், கிழக்கில் கொஞ்சம் வெளிச்சம் தென்பட ஆரம்பித்திருக்கிறது தயாரிப்பாளர்களுக்கு! அதுவும் நலிந்த தயாரிப்பாளர்கள் ‘நல்லநேரம் ஸ்டார்ட்’ என்று குலவை போட்டு கொண்டாடுவார்கள் போலிருக்கிறது. யெஸ்… எதையெல்லாம் உடனடியாக செய்ய வேண்டும்? எதையெல்லாம் நாலு மாதம் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று லிஸ்ட் போட்டு பெண்டு எடுக்கும் விஷால், முதல் அதிரடியாக க்யூப் செலவை கட்டுப்படுத்தியிருக்கிறாராம். தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் இந்த சிஸ்டம், இதுவரை போட்ட பில் தொகையை பாதிக்கு மேல் குறைப்பதற்கான பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்திருக்கிறது. உங்களுக்கு என்ன வேணும்? கேளுங்க செய்யுறோம். ஏன் ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் கொலாப்ஸ் பண்றீங்க என்று ரகசிய பேரம் பேசிய தரகருக்கு சரியான டோஸ் வழங்கப்பட்டு அவர் விரட்டப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில்தான் இன்னொரு அஸ்திரத்தை ஏவியிருக்கிறார் விஷால். கடந்த பல வருஷங்களாகவே படம் வாங்காத சேனல்களுக்கும் சேர்த்து அவரவர் படத்தின் பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், ட்ரெய்லர்கள் என்று வழங்கி வருகிறீர்கள். இனிமேல் படம் வாங்காத எந்த சேனலுக்கும் கிளிப்பிங்ஸ் இல்லை என்று கூறியதுடன், அவ்வாறு கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தராதீங்க என்று உத்தரவு போயிருக்கிறது.

சேனல் ஒளிபரப்புக்காக படம் வாங்கா விட்டாலும் பரவாயில்லை. வாங்குகிற தனித்தனி கிளிப்பிங்ஸ்களுக்காகவாவது தனி பேமென்ட் கொடுங்க என்பதுதான் இப்போதைய சங்கத்தின் அதிரடி. இந்த கெடுபிடிக்கு சேனல்கள் இறங்கி வந்தால், பல தயாரிப்பாளர்களின் வாழ்க்கை வெறும் தியேட்டர் வசூலை மட்டும் நம்பியிருக்காது என்பது நிச்சயம்.

Leave A Reply

Your email address will not be published.