விவசாயிக்காக டிராக்டர் கடனையெல்லாம் அடைச்சாரேப்பா…? விட்ருங்க ப்ளீஸ்!

1

ஐயோ பாவம் விஷால்… சமூக வலைதளங்களின் தக்காளி சட்னி இப்போது இவர்தான். டங்க் ஸ்லிப்…? அல்லது விதிப்பயன்? ஏதோவொன்று! இவர் மீது கொலை வெறியாகிக் கிடக்கிறார்கள் இளைஞர்கள். இத்தனைக்கும் இவர் சொல்லாத விஷயத்தையெல்லாம் சொன்னதாக கிளப்பிவிட்ட கும்பல் இன்னும் இன்னும் என்று எதையெதையோ உருவாக்கிக் கொண்டிருக்க, எப்படி சமாளிப்பது என்று குழம்பிப் போயிருக்கிறார் அவர்.

கடலூர் மாவட்டத்தில் ஒரு விவசாயி டிராக்டர் கடனை அடைக்க முடியாமல் இருந்த போது அவரது டிராக்டரை பறிமுதல் செய்தது கம்பெனி. அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் அவர். மிக மிக ஷாக்கிங்கான இந்த விஷயம் செய்தித் தாளில் வந்த அடுத்த நாளே அந்த டிராக்டர் கடனை நானே அடைக்கிறேன் என்று அடைத்தார் விஷால். விவசாயி ஒருவருக்காக முதல் கரம் நீட்டிய நடிகர் சமீப காலத்தில் விஷால்தான்.

சென்னையில் குடி போதையில் ஒரு பெண் காரை ஒரு ஏழை தொழிலாளி மீது ஏற்றிவிட அந்த நபர் ஸ்பாட் அவுட். இரண்டு குழந்தைகளோடு கதறி நின்ற குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி அக்குழந்தைகளின் படிப்பு செலவுக்காக பெருந் தொகை ஒன்றை வங்கியில் டெபாசிட் செய்தார் விஷால்.

அவரது நிஜ முகம் இப்படியிருக்க, இந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போட்டு வாட்டி எடுக்குறாங்களே… என்று சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். விவசாயிக்காக டிராக்டர் கடனையெல்லாம் அடைச்சாரேப்பா…?விட்ருங்க ப்ளீஸ்! என்று கெஞ்சுகிற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

கெட்ட நேரம் வந்தால், கேப்பங் கூழும் விஷமாகும் போலிருக்கு!

1 Comment
  1. fuck vishal says

    all CM aasai…

Leave A Reply

Your email address will not be published.