விஷாலின் ‘ விவசாயப் புரட்சி! ’ நொட்டம் சொல்றவங்க சொல்லிட்டு போங்க!

1

“பப்ளிசிடி ஸ்டன்ட்…. முதல்வராவணும்னு ஆசைப்பா… முதல்ல சினிமாவுல நடிக்கிற வழிய பாருப்பா… அப்பறம் வரலாம் பொதுப்பிரச்சனைக்கு…” இப்படி நாலாபுறமும் பல்லை போட்டு நசுக்கி நொறுக்கறதுக்குன்னு ஒரு கூட்டம் இருந்தாலும், விஷால் அறிவித்த அந்த விஷயம் அவ்வளவு சாதாரணமானதல்ல! காவிரி பாய்ந்த இடமெல்லாம் இப்போது கண்ணீர்தான் பாய்ந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளை காப்பாற்றுவோம் என்று அரசியல்வாதிகள் ஒரு பக்கம் குரல் கொடுத்தாலும், ஆபரேஷன் எப்ப நடக்கறது. ஆள் எப்போ பிழைக்கறது? உடனடி குளுக்கோஸ் இதுதான் என்று முடிவெடுத்தாரே… அதற்கே ஒரு சல்யூட் விஷால்.

நேற்று ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டது விஷால் தலைமையிலான டீம். “நிஜமாகவே நல்லது செய்யதான் வந்திருக்கேன்… என்னை நம்புங்க” என்று மண்டியிட்டு கண்ணீர் சிந்தி உணர்ச்சிவசப்பட்டார் விஷால். அதற்கப்புறம் அவர் அறிவித்த அந்த விஷயம்தான், தமிழ்சினிமாவின் பொற்கால வார்த்தைகள்.

வருகிற சில தினங்களில் ஏதாவது ஒரு நாளில் திரையரங்கத்தில் வசூலாகும் டிக்கெட் தொகையிலிருந்து ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்பதுதான் அது. அந்த நாள் எது என்பதை விரைவில் அறிவிக்கப் போவதாக குறிப்பிட்டிருக்கிறார் விஷால்.

அந்த ஒரு நாள் பெரிய படங்கள் ரிலீசாகும் நாளாக இருந்தால் பல கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். பாகுபலி பார்ட் 2 வரப்போகிறது. அந்த நாளை அறிவிப்பாரா விஷால்? காத்திருக்கிறோம் நல்ல செய்திக்காக!

1 Comment
  1. Rajii says

    Theatre owners said they won’t accept it. He is not the president of theatre owners. Farmers union head said they don’t want “pichchai” they will fight and get thier “urimai” So this won’t happen.

    Onnume nadakka Vida kudathu endru oru koottam irukku.
    As SAc clearly said there is also a group does not want good things to happen as people get popular.

Leave A Reply

Your email address will not be published.