விஸ்வரூபம் 2 திட்டமிட்ட தேதியில் வருமா? நெருக்கடியில் கமல்!

0

வழக்கு, பஞ்சாயத்து, புலம்பல், அலம்பல் இல்லாமல் இப்பொழுதெல்லாம் உப்புமா படங்கள் கூட வெளிவருவதில்லை. அப்படியிருக்க, கமலின் விஸ்வரூபம் 2 மட்டும் எந்தவித இடையூறும் இல்லாமல் வந்துவிடுமா என்ன? பிரமிட் சாய்மீரா நிறுவனம் எப்பவோ கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வட்டியோடு கேட்டு வழக்கு போட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவர் பிரமிட் சாமிநாதன், இப்போது கிட்னி பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி. அடிப்படை வசதிகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்கிறார் மனுஷன்.

இந்த நேரத்தில் கருணை தொகை என்று ஒரு தொகையையாவது கொடுத்து பிரச்சனையை சுலபமாக்கிக்கொள்ளலாம் கமல். அப்படி அதை சரி செய்தாலும் கூட, ஆகஸ்ட் 10 படம் திட்டமிட்டபடி வெளியே வருமா? ஏனிந்த சந்தேகம்?

கலைஞரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர் கமல். அவர் மறைந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் விஸ்வரூபத்தை வெளியிட்டால், ஊர் உலகம் என்ன சொல்லும்? அட தொழில் வேற. இது வேற என்றாலும், இப்படத்தின் ரிலீஸ் விஷயத்தில் ஒரு துளி விளம்பரத்தை கூட செய்யவில்லை தயாரிப்பு நிறுவனம்.

விளம்பரமே இல்லாமல் வெளியிட்டால், ஸ்ரீரெட்டியின் ஆபாசப்படத்தை கூட யாரும் பார்க்க மாட்டார்கள். நிஜம் இப்படியிருக்க… கமல் அண்டு லைக்கா கூட்டு சேர்ந்து என்ன முடிவை எடுக்கப் போகிறார்களோ?

ஒருவேளை விஸ்வரூபம்2 தள்ளிப் போனால், இந்த ரிலீஸ் தேதியை நம்பி தங்கள் பட வெளியீட்டை திட்டமிட்ட வேறு வேறு படங்கள் சிக்கலுக்கு ஆளாகும்.

சொந்த சிக்கலே பெரும் சிக்கலா இருக்கு. இதுல சுற்றியிருக்கிறவங்களோட சிக்கலை பார்க்க முடியுமா என்ன?

லேட்டஸ்ட் தகவல்- தியேட்டர்களில் அட்வான்ஸ் புக்கிங் ஓப்பன். பட்… டிக்கெட் பணத்தை திரும்ப கொடுக்கிற நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

Leave A Reply

Your email address will not be published.