தூண்டி விடுறதே இவங்கதான்! விவேகம் மெர்சல் போட்டா போட்டி!

0

‘இந்த உலகமே உன் முன்னாடி நின்று….’ என்றுதான் ஆரம்பிக்கும் விவேகம் ட்ரெய்லர். அஜீத்தின் பேஸ் வாய்சில் சொல்லப்படும் அந்த வசனம், அவரது ரசிகர்களை அடி வயிற்றிலிருந்து விசிலடிக்க வைத்ததில் ஒன்றும் வியப்பில்லை. அதற்கு சற்றும் சளைக்காமல் அதே பேஸ் வாய்ஸ்சில்தான் பேசுகிறார் விஜய். மெர்சல் ட்ரெய்லரில், ‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று..’ என்று இவர் பேசும்போது அதே அடி வயிறு கலங்க விசிலடிக்கிறான் ரசிகன்.

இப்படி இருவரும் தங்கள் பலம் அறிந்தே போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இன்னும் உசுப்பிவிடுவது போலதான் சம்பவங்களும் நடக்கிறது இப்போது. விவேகம் உலகம் முழுக்க எத்தனை ஸ்கிரினீல் ரிலீஸ் ஆனதோ, அதைவிட கூடுதலாக ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என்று கிளம்பியிருக்கிறது மெர்சல் குழு. இந்த விஷயம் விஜய் அஜீத்திற்கு தெரியுமா, அல்லது தெரியாதா? அது பிரச்சனையில்லை இப்போது.

மெர்சல் படத்திற்காக 3292 ஸ்கிரீன்களை புக் பண்ணியிருக்கிறதாம் தேனான்டாள் நிறுவனம். ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இது இன்னும் கூடலாம் என்கிறார்கள். விவேகம் இதைவிட அதிகமா? குறைவா? புள்ளிவிபர புலிகள் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.