ஆரம்பிச்சுட்டாய்ங்க அடுத்த குடைச்சலை! இது அஜீத் படத்துக்கு!

0

ஒரு சினிமா வெளிவரும் போது, ரோஜா பூ பூப்பது போல அந்த நிகழ்வு நடந்ததெல்லாம் அந்த காலம். இப்போது ஆணானப்பட்ட ரஜினி படமாக இருந்தாலும், ரத்தமும் குத்தமுமாக கிளறி கிழங்கெடுத்துதான் அனுப்புகிறார்கள். படம் ரிலீசாகிற அந்த கடைசி நிமிஷம்… ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் போர்க்களம்!

அந்த ரணகளத்தை அஜீத் படத்திற்காக இப்பவே ஆரம்பித்துவிட்டார்கள் இங்கே. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு. அழைத்தது யார் தெரியுமா? எப்பவோ உருவாகி, சமீபத்தில் பட்டி பார்த்து பெயின்ட் அடிக்கப்பட்ட தமிழ் திரைப்பட வர்த்தக சபை. “தொடரி பட விஷயத்தில் நீங்க விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் நிறைய கொடுக்க வேண்டியிருக்கு. அதை செட்டில் பண்ணாம விவேகத்தை ரிலீஸ் பண்ண முடியாது. அதனால வாங்க… பஞ்சாயத்து பேசலாம்” என்றார்களாம்.

தியாகராஜனோ விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கதான் தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. இதைவிட்டு விட்டு நான் ஏங்க அங்கு போகணும் என்று நினைத்தவர், “நான் இங்கேயே பேசி முடிச்சுக்குறேன்” என்றாராம்.

ஆக மொத்தம் நிம்மதியா யார் இருந்தாலும், நிமிண்டி விட்டு கதற விடுறதுதான் இன்டஸ்ட்ரியின் இன்னொரு முகம் போலிருக்கு! காயப்படாம வந்திருங்க அஜீத்!

Leave A Reply

Your email address will not be published.