மரம் நட்டது போதும்! மற்றொரு விஷயத்தில் விவேக் கவனம்!

0

அப்துல் கலாமை சந்தித்த போது, “நாடு முழுக்க ஒரு கோடி மரம் நடுங்க விவேக்” என்று சொன்னாலும் சொன்னார். சினிமாவில் நடிப்பதை கூட ஒதுக்கி வைத்துவிட்டு அதே வேலையாக திரிந்தார் விவேக். ‘வச்ச மரம் முளைச்சுதா, முளைச்ச செடி தழைச்சுதா?’ என்றெல்லாம் ஆராயக் கிளம்பினால்,  விவேக்குக்கு ஹார்ட் அட்டாக் உறுதி. ஏனென்றால் யாரும் அதை பராமரிக்கவும் இல்லை. செடி முளைக்கவும் இல்லை.

என் உழைப்பெல்லாம் இப்படி சேறு தண்ணியில்லாம செத்துப்போச்சே என்று நினைத்தாலும் நினைத்திருக்கலாம். ஆக்கபூர்வமான வேலைகளில் அடுத்ததாக கவனத்தை செலுத்தியிருக்கிறார் அவர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத தமிழ்நாட்டு பள்ளிகளில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை கட்டிக் கொடுப்பதுதான் விவேக்கின் அடுத்த திட்டம். (மனசார ஒரு பாராட்டு… பிடிங்க விவேக்)

ஆனால் சொந்தப்பணத்தில் கட்டினால், ஒரு சுண்ணாம்பு காளவாய் கூட தேறாது. மனமிருக்கும் செல்வந்தர்கள் மனசு வைக்க வேண்டுமே? விஐபி 2 சக்சஸ் மீட்டுக்கு வந்திருந்த விவேக், இந்த தகவலை சொல்லி, பெரிய பட்ஜெட் படங்களில் வரும் லாபத்தில் ஒரு சதவீதத்தை இதுபோன்ற திட்டங்களுக்காக கொடுத்தீங்கன்னா புண்ணியமா போவும் என்றார். விவேக் இப்படி சொன்னபிறகும் கேட்டுக் கொண்டிருக்க, தயாரிப்பாளர் தாணு என்ன கல் மனசுக் காரரா? ஆன் தி ஸ்பாட்டிலேயே அறிவித்துவிட்டார்.

“என் சார்பில் 10 லட்சம் தர்றேன். விவேக் எப்ப வேணும்னாலும் வந்து வாங்கிட்டு போகலாம்” என்று!

அதற்கப்புறம்தான் தாணு குடியிருக்கும் சென்னையில் பரவலாக மழை! அது தொடர வேண்டும் என்றால், இன்னும் சில தயாரிப்பாளர்களும் மூட்டைய அவுருங்கய்யா….!

Leave A Reply

Your email address will not be published.