பாலகிருஷ்ணா மாதிரி ஒரு நல்ல மனசு ஹீரோ கூடவா நம்ம ஊர்ல இல்ல?
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை பற்றி நம்ம ஊரில் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்.டி.ராமராவ் காருவோட சன்! ஒரு சூரியனையே பெற்றுப் போட்ட மாதிரிதான். மனிதர் ஒரே சுள்… மற்றும் சூடு. தெலுங்கில் இவரது ஆக்ஷன் படத்தை நிஜமாகவே(?) அனுபவித்தவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்டவருக்கு அங்கு ரசிகர்கள் கூடாமலிருந்தால்தான் ஆச்சர்யம். ராமராவை பார்த்து ‘தேவுடா’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டவர்கள், அவரது மகனான இவரை பார்த்தால் ‘ஜெய் ஜெய் பாலையா’ என்று கூவுகிறார்கள்.
இவர் நடித்து தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘கௌதமி புத்திர சாதகர்ணி’ என்ற படத்தின் தமிழ் டப்பிங் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஜெய் ஜெய் பாலையாவே(!) பிளைட் பிடித்து வந்துவிட்டார். அவருக்கு முன்பே திரண்டிருந்த அவருடைய ரசிகர்கள், நிகழ்ச்சி நடந்த இரண்டு மணி நேரமும் ‘ஜெய் ஜெய் பாலையா’ என்று கூவிக் கொண்டேயிருந்தார்கள். நடுவில்தான் அந்த ஆச்சர்யம்.
திரையில் ஒரு காட்சி. பாலகிருஷ்ணாவின் சோஷியல் சர்வீஸ்தான் அது. ஐதராபாத்தில் மிகப்பெரிய கேன்சர் மருத்துவமனையை கட்டியிருக்கிறார். உள்ளே நுழையும் கேமிரா ஒவ்வொரு ஹால்களுக்கும் நுழைந்து வர வர… அந்த கோபக்கார பெரிய மனிதனின் ஈரப்பசை மனசு அப்படியே அப்பட்டமானது. இலவசமாக சிகிச்சை அளித்து வரும் அந்த கேன்சர் மருத்துவமனை நம்ம ஊர் அப்போலோ மருத்துவமனைக்கு நிகராக இருக்கிறது.
மக்கள் பணத்தை அள்ளி மக்களுக்கே வழங்கும் இப்படியொரு பெரிய மனுஷன் இங்கு இல்லையே? இல்லவே இல்லையே?
அட ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், தனுஷ்னு அம்புட்டு பேரு இருக்கீங்களே…. ஓசியில எடுக்கிற மாதிரி ஒரு ரத்த பரிசோதனை கூடம் கூடவா உங்களால் நடத்த முடியாது? (சூர்யாவின் அகரம் பவுண்டேஷனுக்கு இந்த நேரத்தில் ஒரு சபாஷ்)
தலையில் வைத்துக் கொண்டாடுடா என் மானம் கெட்ட தமிழ்ப்பட ரசிகனே…
Mr.Andhanan, ppl r giving hits ur site n u r earning money. Why dont u do something for ppl to give back.