இந்த பாரதிராஜாவுக்கு என்னாச்சு? இப்படி கன்பீஸ்(?) ஆகிட்டாரே?

1

அண்மையில் திரைக்கு வந்து ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் படம் லட்சுமி. பிரபுதேவா நடித்த படங்களிலேயே பிசுபிசுத்து போன படம் இதுதான் என்கிறார்கள் திரையுலக வியாபாரிகள். அது மட்டுமல்ல, ஏ.எல்.விஜய்யின் அதி அற்புதமான இந்த திரைக்கதையை ‘ஓல்டு’ ஐட்டங்களுக்கு பேர் போன மூர் மார்க்கெட் சந்தில் வைத்து தேங்காய் கற்பூரம் காட்ட வேண்டும் என்கிற அளவுக்கு திகிலடைந்திருக்கிறது சினிமா ஏரியா.

இதற்கப்புறம் இவர் இயக்குகிற படங்களுக்கு என்ன மாதிரி ரீயாக்ஷன் காட்டுவதென்று இப்பவே மண்டையை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். நிஜம் இப்படியிருக்க… கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தை பழம் பெரும் இயக்குனர் பாரதிராஜாவுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார்கள். மாலை, மரியாதை… மணக்க மணக்க வணக்கம்… என்று அவரை குளிப்பாட்டி குளிர் காய விட்டதில் அதிகம் கன்பியூஸ் ஆகிவிட்டார் போல.

படக்குழுவை பாராட்டி குளிர்வித்திருக்கிறார் இயக்குனர் இமயம். அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. இயக்குனர் ஏ.எல்.விஜய்யை ‘இந்தியாவின் பெருமை’ என்றும் தோள் தட்டி பாராட்டியதாக அறிவித்து மகிழ்கிறது லட்சுமி பட நிறுவனம்.

பாரதிராஜாவின் படங்களை இப்போது பார்த்தாலும் எழுந்து போக மனசிருக்காது. அப்படிப்பட்ட இயக்குனர், ஒரு காப்பி பேஸ்ட் இயக்குனரை, அதுவும் உப்பு சப்பில்லாத படத்தை எதற்காக பாராட்டினார் என்பதுதான் கடுபேற்றும் கேள்வி!

முதல் மரியாதையின் முதல் மரியாதை, மதிக்கும்படி இல்லையே மை லார்ட்!

1 Comment
  1. Priya says

    Ha ha . We watched the movie that you were produced . I don’t even remember the name . Srikanth and bavana and stanly directed . Is that mean your brainless guy for producing that bullshit movie ? No right . Even though your just a name tag for the production . Some people like some kind of movies . Same here as well.

Leave A Reply

Your email address will not be published.