நண்பனின் துரோகம்தான் விவேகம்! முழு கதையும் இதோ!

1

‘விவேகம்’ ட்ரெய்லரை பார்த்தால், எதையும் யூகிக்கும்படி இல்லை! ஆனால் விவேகம் ஏரியாவுக்குள் காதை நுழைத்து, கபளீகரம் செய்ததில் படத்தின் கதையை நைசாக உருவ முடிந்தது!

இந்தியன் மிலிட்டிரி ஆபரேஷனில் இறங்கும் நண்பர்கள் சிலருக்கு அஜீத்துதான் சீஃப். அதிரடியாக முன்னேறும் அஜீத்துக்கு, ஒரு கட்டத்தில் பின்னடைவு. எப்படி? ஏன்? என்று ஆராய்ந்தால், சக நண்பனே துரோகியாக இருந்தது தெரிய வருகிறது. அப்புறம் என்ன? க்ளைமாக்சில் அந்த நண்பனையே போட்டுத் தள்ளுகிறார் அஜீத்.

‘உன் மரணம் கொடூரமா இருக்கும்’ என்று சொல்லி சொல்லியே துரோகியை தேடும் அஜீத், அது தன்னால் அதிகம் நேசிக்கப்பட்ட நண்பன்தான் என்று தெரிந்ததும் என்ன செய்கிறார்? அவனை விட்டுவிடாமல் சொன்ன மாதிரியே கொடூரமாக கொல்வதை மிரளும்படி எடுத்திருக்கிறார்களாம். படத்தில் சட்டையில்லாமல் அஜீத் போடும் அந்த க்ளைமாக்ஸ் பைட் மரண மாஸ் ஆக இருக்குமாம்.

அஜீத்தின் கம்பீரமான ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் தியேட்டர் கதி கலங்கப் போவது மட்டும் நிச்சயம்!

1 Comment
  1. Pisaasu Kutti says

    thaandavam 2nd part ??

Leave A Reply

Your email address will not be published.