அஜீத்தின் அருள்வாக்கு! சிவாவுக்கு அதுவே சிவ வாக்கு!

0

ஹீரோக்களின் வீடுகளில் டைரக்டர்கள் வாய்ப்புக்காக காத்து நிற்பது படைப்புலகத்திற்கே விடப்படுகிற பளார்! அப்படியிருந்தும் சொந்த வயிறு சுருங்குதே… என்கிற ஒரே காரணத்திற்காக ரவுண்டு கட்டி நிற்கிறார்கள் கோடம்பாக்கத்தில்! உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், விக்ரமுக்கு அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து அவரை ஆளாக்கியவர்களில் ஒருவரான தரணி, இப்போதும் விக்ரம் அழைக்க மாட்டாரா என்று காத்திருக்கிறார். அவ்வளவு ஏன்? பலரையும் ஆளாக்கிவிட்ட பாலாவுக்கே இப்போது பல்லாங்குழி காட்டுகிறார்கள் ஹீரோக்கள்.

பெரிய ஹீரோக்கள்தான் இப்படி என்றால், விஷ்ணு விஷால் லெவலுக்கு கூட பிசியாகதான் இருக்கிறார்கள். நாள்தோறும் இவர் போன்ற இளம் சுமார் ஹீரோக்களை கூட ரவுண்டு கட்டுகிறார்கள் படைப்பாளிகள்.

இந்த நேரத்தில், ‘ஒரே கமிஷன் மண்டி. ஒரே வெல்ல மூட்டை’ என்று தன்னை அஜீத்திற்கு ஒப்புக் கொடுத்துவிட்டார் சிறுத்தை சிவா! (மற்றவங்க கதையெல்லாம் பார்த்தா இதுதான் பெஸ்ட் என்று தோன்றியிருக்கலாம்) ஒருவரை பிடித்துவிட்டால் அவருக்கே அடுத்தடுத்து வாய்ப்புகளை கொடுத்து வரும் அஜீத், சிவாவுக்கு இப்போது இருக்கிற கிரேஸ் பற்றி நன்கு அறிந்தும் வைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் சிவாவுடன் இணைந்து படம் தர காத்திருப்பதையும் அறிந்திருக்கிறார்.

இருந்தாலும் சிவாவின் எண்ணம் என்னவாக இருக்கிறது? “தமிழ்சினிமா இயக்குனர்கள் எல்லாருக்குமே அஜீத் சாருடன் ஒரு படத்தையாவது இயக்கி விடணும்னு ஆசை இருக்கும். ஆனால் அஜீத் சாரே எனக்கு தொடர் வாய்ப்புகள் கொடுக்க நினைக்கும்போது நான் ஏன் இன்னொரு ஹீரோவை யோசிக்கணும். அந்த வீட்டின் கதவு அடைக்கப்பட்டாலொழிய எனக்கு வேற ஹீரோ வேணவே வேணாம்…” என்கிறாராம்.

மண்டைக்கு மேல நிரந்தர நிழல் அடிச்சா, வேறொரு குடை எதுக்குன்னு கேட்குறாரு. தப்பில்லையே?

Leave A Reply

Your email address will not be published.