சுசித்ரா எங்கே? தலைமறைவா? கடத்தலா?

1

கடந்த பல வாரங்களாக ரசிகர்களை ஜில்லாக்கியதுடன், கோடம்பாக்கத்தையும் சூடாக்கிய மேஜிக் பெண் சுசித்ராகார்த்திக், தற்போது ‘நாட் ரீச்சபுள் அட் த மூவ்மென்ட்’! சுசி லீக்ஸ் ட்விட்டர் அக்கவுன்ட்டில், சுண்டல் செய்வது எப்படி? சுரைக்காய் அரிவது எப்படி? போன்ற அரைவேக்காட்டு துணுக்குகளே தொடர்வதால், புல் வேக்காட்டில் இருக்கிறார்கள் சுசிலீக்ஸ்சின் நாடு தழுவிய பக்தர்கள்.

கொஞ்சம் சீரியஸ் ஆக இந்த விஷயத்தை அணுகினால், சுசித்ராவுக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று கூட அஞ்ச வேண்டியிருக்கிறது. தற்போது சுசித்ரா எங்கேயிருக்கிறார் என்கிற தகவல், அவரது கணவர் கார்த்திக்குக்கே தெரியாதநிலை ஏற்பட்டிருக்கிறதாம். அவரது வழக்கறிஞரை தொடர்பு கொண்ட மீடியாவிடம், “எனக்கும் தெரியல சார்” என்பதே பதிலாக இருக்கிறது.

அவர் பரபரப்பான படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த போது கூட, தமிழில் ஒன்றிரண்டு நிருபர்களிடம் தகவல் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் இப்போது யார் முயற்சி செய்தாலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சுசித்ரா எங்கு போனார்? யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்? சுய நினைவுடன் இருக்கிறாரா? அல்லது… வேறு ஏதாவது ஆபத்து சூழ்ந்திருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் கடைசியாக கூறும்போது ஒரு புகழ்பெற்ற நடிகரின் பெயரை குறிப்பிட்டு, “அவரது வீடியோதான் அடுத்ததாக வரப்போகிறது” என்று எச்சரித்திருந்தார். சுசித்ரா காணாமல் போனதற்கும் அந்த புகழ்பெற்ற நடிகருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.

ஏதேனும் அசம்பாவிதம் நேர்வதற்கு முன், அவரை காப்பாற்ற வேண்டிய கடமை போலீசுக்கு இருக்கிறது.

ஏதாவது நடக்குமா?

1 Comment
  1. ஸ்டாலின் says

    முதலில் இவளை சாகடிக்க வேண்டும். ஒன்றாக இருந்து ஆட்டம் போட்டு விட்டு பிறகு பத்தினி போல பேசுகிறாள்.

Leave A Reply

Your email address will not be published.