தமிழகத்தின் அடுத்த முதல்வர் வாட்டாள் நாகராசுவா இருக்குமோ? டவுட் கிளப்பும் சாருஹாசன்!

1

சொந்த வீட்லேயே எலியை வச்சுகிட்டு, ஊருக்கே மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

கமலின் மய்யம் விசில் ஆப், நேற்று கோலாகலமாக துவங்கப்பட்டுவிட்டது. பல நாள் உழைப்பு. மண்டையை கசக்கியதன் பலன், மிக அற்புதமான செயலியாக வந்திருக்கிறது அது.

அந்தந்த ஊரில் தேவைப்படும் அவசியங்களை, நடக்கும் அநியாயங்களை இதில் வீடியோவாக பதிவிடலாம். அல்லது புகாராக தெரிவிக்கலாம். அதை சம்பந்தப்பட்ட துறைக்கு கொண்டு செல்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது கமலின் இந்த செயலி. இத்தகைய புகார்களை அரசு கண்டுகொள்ளுமா, விட்டுத் தள்ளுமா? என்பது அடுத்த விஷயம். ஆனால் குறைகளை அரசின் கண் விழிக்கு அருகே கொண்டு செல்கிற இந்த ஒரு திட்டமே, கமலின் புலிவேக பாய்ச்சலுக்கு எடுத்துக்காட்டு.

இந்த நேரத்தில்தான் அவரது அண்ணன் சாருஹாசன் ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று கூறியிருக்கிறார்.

எப்போதும் தாட் பூட்டாக பேசுவதில் சாருஹாசன் யாருக்கும் சளைக்காத ஹாசன். ‘என் தம்பி கமலாவது கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றான். நான் இல்லேன்னு சொல்றேன்’ என்றார் ஒருமுறை. அப்படிப்பட்டவர், இப்படி தடாலடியாக பதிவிடுவது ஆச்சர்யமில்லை. ஆனால் ஒரு குழப்பம்.

அவர் சொல்லும் அந்த கர்நாடகாக் காரர் யார்? வாட்டாள் நாகராஜா இருக்குமோ, இல்ல தேவ கவுடாவாக இருக்குமோ? என்றெல்லாம் மயிர் கூச்செரிகிறார்கள் ரசிகர்கள்.

ஏனென்றால், ‘நான் தமிழன்’ என்று ரஜினி சத்தியம் பண்ணி பல வருஷமாச்சே?

1 Comment
  1. Raja says

    மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ்நாட்டை தமிழந்தான் ஆளவேண்டும் என்று எங்களுக்காக உயிரை வருத்தி குரல் கொடுக்கும் தமிழ் காவலர்களுக்கு…
    இப்ப உங்களுக்கு என்ன வேண்டும் ? தமிழ்நாட்டை ஒரு தமிழந்தான் ஆளவேண்டும் ? சரி இப்போது யார் ஆள்கிறார்கள் ? தமிழன்தானே ? இந்த தமிழன் தலைமையிலான ஆட்சி காலம் இன்னும் நான்கு வருடங்கள் பாக்கி இருக்கிறது …அப்புறம் எதற்கு கூப்பாடு ? போதுமய்யா… இனியும் முடியாது… எங்களுக்கு எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லை. எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு நேர்மையான தலைமை, ஒரே ஒரு தலைமை. எங்கள் வேலையை நாங்கள் செய்தால் எங்களைப் பார்த்துக்கொள்ள அரசாங்கம் இருக்கிறது என்று நாங்கள் நம்பிக்கையாக வாழ ஒரு தலைமை. எங்கள் காசு எங்களுக்கே என்று நிம்மதியாக இரவில் தூங்க ஒரு பாதுகாப்பான தலைமை. அவ்வளவே… தமிழனா, மலையாளியா, கன்னடனா, இந்துவா, முஸ்லிமா, கிருத்துவனா, செட்டியாரா, தலித்தா, கவுண்டரா, நாடாரா, தேவரா… எதுமே எங்களுக்குத் தேவையில்லை. நல்ல நேர்மையான மனிதன், எங்கள் வாழக்கை தரம் உயரவேண்டும் என நினைக்கும் ஒரு தலைவன் மட்டுமே வேண்டும்.

    தமிழன், தமிழ் என்று சொல்லி இத்தனை நாள் பொழப்பு ஓட்டியது போதும். எங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி தூண்டியே எங்களுக்கு நல்லது செய்ய யாரையும் வரவிடாமல் தடுத்தது போதும். உங்கள் கோஷங்களால் உங்கள் பொழப்பு ஓடுகிறதே தவிர எங்கள் பொழப்பு டாஸ்மாக் கடை வாசலில் சந்தி சிரிக்கிறது. ஏற்கனவே இலவசத்திலும், போதையிலும் கிடக்கும் தமிழனிடம் மொழி வெறியையும் திணிக்காதீர்கள். இந்தி வேண்டாம் என்று போராடிய அத்தனை தலைவர்களின் பேரன்களும் இந்தி நன்றாக பேசுகிறார்கள். இங்கே நாங்கள் காட்பாடி தாண்டினால் திணறுகிறோம். தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்று கூப்பாடு போடுகிறீர்களே அப்படிப்பட்ட தமிழன் உருவாகவிடாமல் யார் தடுத்தது ? ஏன் எங்களுக்கு நீங்கள் தமிழன், தமிழன் என்று சொல்பவர்களிடம் நம்பிக்கை வரவில்லை ? கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா ? எங்களின் அன்றாட வாழ்க்கையை முன்னேற்றக்கூடிய எந்த திட்டமோ, யோசனையோ உங்களிடம் இல்லை. எங்கள் பிரச்சனைக்கான எந்த நடைமுறை தீர்வும் உங்களிடம் இல்லை. பின் எப்படி உங்களை நம்புவது ? எங்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு எந்த குரலும் கொடுக்காமல், தமிழ் தமிழ் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தால் உங்களை நாங்கள் புறக்கணிக்கவே செய்வோம். ஈழ சகோதரர்கள் மேல் உங்களை விட பல மடங்கு எங்களுக்கு அக்கறை உள்ளது. ஆனால் கூப்பாடு போடும் நீங்கள் இங்கிருக்கும் ஈழ அகதிகள் வாழ்வு மேம்பட எதையாவது செய்ததுண்டா ? குறைந்த பட்சம் உங்கள் நிறுவனங்களில், வீடுகளில் அவர்களை வேலைக்கு வைத்திருக்கிறீர்களா? தயவு செய்து தமிழ், தமிழ்னு போலி கூச்சல் போட்டு எங்க வாழ்க்கையை கெடுக்காதிங்க. எங்கள் மொழிக்கும், எங்கள் கலாசாரத்துக்கும் ஆபத்து வந்தால் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே காட்டிவிட்டோம். இப்ப எங்களுக்கு தேவை எங்களுக்கு வேலை செய்ய நல்ல தலைவர்கள் மட்டுமே … தனது செல்வாக்கினை மத சார்பான பாஜகவுக்கு ரஜினி பயன்படுத்தினால் அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். அந்த தவறை அவர் செய்ய மாட்டார் .தலைமையை இழந்த அதிமுக இன்று பிஜேபியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதை அறியாதவர் அல்லர் ரஜினி.

    ரஜினியின் அரசியல் நிறம் இதுதான் என்பது தெரியாத நிலையில் எதிர்ப்புக் குரலை உயர்த்துவது —-அதில் சுயநலம் இருப்பது மாதிரி தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.