ஸ்ரீரெட்டிக்கு தொந்தரவு கொடுத்த அந்த தமிழ்ப்பட இயக்குனர் யார்?
வாழப்பூவே சமயத்தில் மல்லிப்பூ போல தெரிந்தால், அது பூவின் குற்றமல்ல. கண்ணு ரெண்டும் காலாவதியாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்! அப்படியொரு காலாவதி ஆசாமிதான் ஸ்ரீரெட்டிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்க வேண்டும். வறட்சியா இருந்தா வாட்டருக்கு பதிலா குவாட்டரை சாத்துவேன் என்பவர்களால்தான் ஸ்ரீரெட்டி விஷயத்தில் அப்படியொரு முடிவை எடுத்திருக்க முடியும்.
ஆந்திர படவுலகமே அந்தல சிந்தலயாகிக் கொண்டிருக்கிறது அவரால். முன்னணியிலிருக்கும் பலரையும் சுட்டிக்காட்டும் ஸ்ரீ, தன் மேல் ‘கைய’ வச்சதுக்கான அத்தனை எவிடென்சையும் கைமேல் வைத்திருக்கிறார். அரண்டு போயிருக்கிறார்கள் அத்தனை ஜொள்ளர்களும். இந்த நிலையில்தான் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு மாநில எல்லையை தாண்டி, தமிழக எல்லைக்கும் வந்து சேர்ந்திருக்கிறது.
“தமிழ்ப்பட இயக்குனர் ஒருவரும் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். அதற்கான ஆதாரங்களை வச்சுருக்கேன். சமயம் வரும்போது சொல்லுவேன்” என்று கூறியிருக்கிறார். (அது எப்பம்மா வரும்?) இதை தொடர்ந்து அவரா இருக்குமோ, இவரா இருக்குமோ என்று கிளிஜோசியம் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
நமக்குத் தெரிந்து தமிழிலிருந்து தெலுங்குக்கு போய் படமெடுத்த இயக்குனர்களில் எலிஜிபிள் வாலிபர்கள் என்றால், ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. இன்னொருவர் ராகவேந்திரா லாரன்ஸ். பி.வாசு, கே.எஸ்.ரவிகுமாரெல்லாம் காலம் போன காலத்துல கலர் கண்ணாடி தேடப்போவதில்லை.
இவங்க ரெண்டு பேர்ல யாருங்க அந்த கலீஜ் கண்ணன்? ஸ்ரீரெட்டியால மண்டை வெடிக்குதே?
ar murugadass….. conformed…..
Vera yaru, namba doss annan thaan.