யாருடா தலைவர்? ஏர்டெல்லை உலுக்கிய இளைஞர்!

3

‘தானே உட்கார்ந்த தலைவா…’ என்று முழங்கியபடி விவேக்கின் வேஷ்டியை பிடித்துக் கொண்டே வருவார் கொட்டாச்சி. இந்த காமெடி காட்சியை கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும் சிரித்து மகிழ்ந்த தமிழ்சினிமா ரசிகனுக்கு அவ்வப்போது அதே காட்சியை ரீப்ளே செய்து கிச்சு கிச்சு மூட்டி வருகிறது சேனல்களும்!

காட்சி இதுதான்…

விவேக் எரிகிற அடுப்பில் உட்கார்ந்துவிடுவார். பேக் டோர் படு நாசம் ஆகியிருக்கும். அவரது வேஷ்டி பிருஷ்டத்தில் படாமல் பிடித்துக் கொண்டு நடக்க ஒரு அசிஸ்டென்ட் வைத்துக் கொள்வார். அவர்தான் கொட்டாச்சி. இந்த சூழ்நிலையில் பாத்ரூமில் ஒரு முறை தானே யார் துணையும் இல்லாமல் சிட்டிங் அடிப்பார் விவேக். அப்போது, ‘தானே உட்கார்ந்த தலைவா…’ என்று முழங்குவார் கொட்டாச்சி.

அப்படிதான் ரஜினியையும் ‘தலைவா’ என்று விளிக்க ஆரம்பித்திருக்கிறது தமிழ்நாடு. தலைவர் 167, தலைவர் 168 என்றே அழைக்கிறார்கள் ரஜினி படத்தை. இது போதாது என்று தலைவா… என பேக்ரவுன்ட் மியூசிக்கிலேயே கோஷத்தை கலக்கிறார் சொந்தக்கார தம்பி அனிருத். அங்கே இங்கே என்று எங்கெங்கும் ரஜினியை தலைவராக்கும் முயற்சி இப்படிதான் நடக்கிறது. போராட்டம் இல்லை. சிறை வாசம் இல்லை. தேவைக்கான முழக்கங்கள் இல்லை. அட, தான் வாழும் சினிமாவிலேயே நாட்டாமைகளும் ஏமாற்றுக்காரர்களும் பெருகிவிட்டார்கள். அவர்களை களையெடுக்கக் கூட முயலவில்லை. பல வருடங்களாக பெரிய தியேட்டர்களை சின்ன தியேட்டராக மாற்றிக் கொள்ள சட்ட திருத்தம் வேண்டும் என்று அரசிடம் கெஞ்சும் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஆதரவாக ஒரு செங்கல்லை கூட தூக்கி வைக்கவில்லை.

ஆனாலும் அவர் தலைவர். அடடா… அடடா… இப்படியல்லவோ இருக்க வேண்டும் ஒரு தலைவனின் உருவாக்கம்!

இந்த நிலையில்தான் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறது. அவர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ் சில் ரஜினியை ‘தலைவர்’ என்றே குறிப்பிடுகிறார்கள். இதையடுத்து கஸ்டமர் கேர் ஐ தொடர்பு கொள்ளும் ஒரு இளைஞர், யாருடா தலைவன்? என்று கேட்டு அந்த நிறுவன ஊழியரை வறுத்தெடுக்கும் ஒரு ஆடியோ பதிவு வைரல் ஆகி வருகிறது. ரஜினியெல்லாம் தலைவன்னா காமராஜர் யாரு? கக்கன் யாரு? என்றெல்லாம் அந்த இளைஞர் கேட்பதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் அந்த ஊழியர்.

இப்படி ஆளாளுக்கு லாஜிக்படி கேள்வி கேட்டால், தானே உட்கார்ந்த தலைவன்களெல்லாம் முட்டையிலேயே ஆம்லெட் ஆகிவிடுவார்கள்.

செய்வீங்களா…? செய்வீங்களா…?

பின்குறிப்பு- ரஜினி மட்டுமல்ல, விஜய் அஜீத் தனுஷ் போன்ற நடிகர்கள் எந்த வித பொதுசேவையிலும் ஈடுபடாமல் திடீர் தலைவர்கள் ஆக முயன்றால் அப்பவும் இதே பதிவுதான் ரிப்பீட்!

3 Comments
 1. Arul says

  Waste = Rajinikanth
  Fake= Rajinikanth
  Fraud= Rajinikanth

  1. Joseph Vijay says

   என்னடா இப்பவே எரியுதா.. இன்னும் பாரு இதெல்லாம் எரிய போகுதுனு….
   தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் பெற்ற ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா . அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், தமிழக மக்களின் பேராதரவோடு, மக்கள் தலைவர் ரஜினி அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆவது உறுதி டா .

 2. தமிழ்செல்வன் says

  தலைவர் டா . ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

Leave A Reply

Your email address will not be published.