ஜெயம் ரவியின் போகன் திருட்டுக் கதையா? ஒரிஜனல் கதையாசிரியருக்கு அடி உதை!

0

‘கொடியில காய்ஞ்ச என் ஜட்டி திருட்டு போயிருச்சு’ என்றுதான் இதுவரைக்கும் கம்ப்ளைன்ட் வரவில்லை. மற்றபடி கோடம்பாக்கமும், அது தாங்கிக் கொண்டிருக்கும் சினிமா ஏரியாவும் எப்போதும் கொல குத்து, குத்து வெட்டு லெவலிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் கதைத் திருட்டு விஷயத்தில் அநேகமாக பெரிய ஹீரோக்கள் படங்கள் அத்தனையும் சிக்கிக் கொள்வது தவிர்க்கவே முடியாத தத்தளிப்பாக இருக்கிறது. இந்த நிலையில்தான் வாட்ஸ் ஆப்பில் வந்து “காப்பாத்துங்க ஞாயமாரே…” என்று கதறிக் கொண்டிருக்கிறார் ஒரு இளைஞர். அவர் பெயர் ஆன்ட்டனி. தொழில் கேமிராமேன். பிரச்சனை ? கதை திருட்டு.

ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய  லட்சுமணன், அதற்கப்புறம் அதே ஹீரோவான ஜெயம் ரவியை வைத்து இயக்கி வரும் படம் போகன். ஹன்சிகா கையில் இருக்கும் ஒரே தமிழ்ப்படம் என்கிற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. விரைவில் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த கதை, என்னுடையது என்று சில மாதங்களுக்கு முன்பே பஞ்சாயத்தை கூட்டிவிட்டார் இந்த ஆன்ட்டனி. இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்துவிட்டார். அவர்களும் தீர விசாரித்து, ஆமாம்… ஆன்ட்டனி சொல்றது கரெக்ட்தான் என்று கூறிவிட்டதாம். அதற்கப்புறமும் அந்தப்பக்கத்திலிருந்து ஒரு பதிலும் இல்லாததால், இந்த பிரச்சனையை மீண்டும் மீண்டும் கிளறிக் கொண்டேயிருந்தார் ஆன்ட்டனி.

அங்குதான் ஒரு விபரீதம். நேற்று கோயம்பேடு பகுதியில் வந்து கொண்டிருந்த இவரை, சிலர் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பலத்த காயமுற்ற அவர் மருத்துமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாராம். என்னை தாக்கியது டைரக்டர் லட்சுமணன் ஏற்பாடு செய்த குண்டர்கள்தான் என்பது ஆன்ட்டனியின் வலுவான வாதம்.

அந்தக் கதை திருட்டுக் கதையா, இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் லட்சுமணன் இருக்கிறாரோ இல்லையோ? ஜெயம் ரவி இருக்கிறார்.

To listen Audio click below:-

Leave A Reply

Your email address will not be published.