ஹாரிஸ் ஜெயராஜை கழற்றிவிட்டது ஏன்? கவண் கே.வி.ஆனந்த் விளக்கம்!

1

விஜய் சேதுபதி டாக்டராக நடித்தாலும், அப்போதும் வில்லேஜ் டாக்டரை போல எளிமையாகதான் இருப்பார். அவரது தோற்றம் அப்படி! அவரையே சிம்பு போல சிட்டி இளைஞனாக காட்டுவதற்கு ஒரு ‘தில்’ வேண்டும். அந்த ‘தில்’ கே.வி.ஆனந்துக்கு கிலோ கணக்கில் இருப்பதை ‘கவண்’ ட்ரெய்லர் நிரூபித்தது. (மனுஷன் என்னாவொரு அழகு! ஸ்டைல்!) இவருக்கு ஜோடியாக மடோனா நடித்திருக்கிறார். அதையெல்லாம் விட முக்கியம்… இப்படத்தில் டி.ராஜேந்தர் மிக மிக முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

ஒரு கார்ப்பரேட் வில்லனை சொசைட்டியில் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவன் வெல்வதுதான் கதை. நான் இப்படியொரு படம் பண்ணுகிறேன் என்றதும் இன்டஸ்ட்ரியில் சில முக்கியமான ஹீரோக்கள் நான் நடிக்கிறேன்னு விருப்பப்பட்டாங்க. ஆனால் இந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிச்சாதான் சரியா இருக்கும்னு தோணுச்சு. அவரே கிடைச்சுட்டார்” என்கிறார் டைரக்டர் கே.வி.ஆனந்த்.

படத்தில் இன்னொரு முக்கியமான ரோலில் நடிக்க டி.ராஜேந்தரை அணுகினாராம். ஆனால் உஷாராகிவிட்டார் டி.ஆர். “சார் எல்லாரும் என்னை ஏன் நடிக்கக் கூப்புடுறாங்கன்னு தெரியும். என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலாம்னுதானே…? அதுக்கெல்லாம் மசியுற ஆள் நானில்லை” என்று தவிர்த்துவிட்டாராம். ஆனால் “கதை கேளுங்க. பிடிச்சிருந்தா நடிங்க” என்று சொல்லிப்பார்த்த கே.வி.ஆனந்த், அதற்கப்புறம் இரண்டு வாரம் டைம் கொடுத்துவிட்டு மறுபடியும் போயிருக்கிறார். அதற்கப்புறம்தான் ஒப்புக் கொண்டாராம் டி.ஆர்.

தன் எல்லா படத்திலும் ஹாரிஸ் ஜெயராஜையே இசையமைப்பாளராக பணியாற்ற வைக்கும் கே.வி.ஆனந்த், இந்தப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியை இசையமைப்பாளராக்கிவிட்டார். “இருந்தாலும் ஹாரிசுடன் இருக்கிற நட்பு அப்படியேதான் இருக்கு. ஒரு சேஞ்ச் இருக்கணும்னுதான் இப்படியொரு முடிவெடுத்தேன். இப்பவும் எனக்கு ஏதாவது டவுட்டுன்னா ஹாரிஸ்குதான் போன் அடிப்பேன் ” என்றார் கே.வி.ஆனந்த்.

நம்பிட்டோம்!

1 Comment
  1. Krishnan says

    அட போங்கய்யா. கேவி. ஆனந்த் நல்லா ஹிப் ஹாப் கிட்ட மாட்டிட்டார். ஹிப் ஹாப் ஆதி வச்சி செஞ்சுட்டான். பாட்டெல்லாம் வேஸ்ட். TR பாடி கூட காப்பாத்த முடியல. கேவி. ஆனந்த் சார், ஒரு அனிருத் கூட உங்களுக்கு மாட்டலையா சார்?

Leave A Reply

Your email address will not be published.