ரஜினி-சோ ஷோ! ரஞ்சித் வராதது ஏன்?

0

ரஞ்சித்தை ஒரே படத்தில் தஞ்சாவூர் பெரிய கோயிலின் தலையில் ஏற்றி வைத்துவிட்டார் ரஜினி. இதற்கு முன்னும் சரி, பின்னும் சரி, இப்படியொரு புகழை ரஞ்சித் அடைந்திருக்கிறாரா, அல்லது அடைவாரா என்றால், “டவுட்டுதான்” என்று டக்கென பதிலளிக்கும் உலகம்! சீசரின் மனைவி வேண்டுமானால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கலாம். ஆனால் சினிமாவில் முணுக்கென்றால் வரும் சந்தேகம். சந்தேகம். அப்படியொரு சந்தேகத்தைதான் விதைத்திருக்கிறது அந்த சம்பவம்.

வேறொன்றுமில்லை… பத்திரிகையாளர் சோவுக்கு ரஜினி ‘கபாலி’ படத்தை திரையிட்டு காண்பித்தார் அல்லவா? பொதுவாக இதுபோன்ற பெரிய மனிதர்களுக்கு ஷோ போடும் போதும் சரி. அல்லது ரஜினி மாதிரியான உலகம் கவர் ராஜாக்கள் இருக்கிற இடத்திலும் சரி. அப்படத்தின் டைரக்டர் வந்து நிற்பதுதான் வழக்கம். இதற்கு முன் ரஜினி இதுபோல படம் பார்க்க இதே தியேட்டருக்கு வரும்போதெல்லாம் அப்படம் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் அவருக்கு முன்பாக வந்து நின்று ரஜினிக்காக காத்திருப்பதுதான் இயல்பு. ஆனால் சம்பந்தப்பட்ட நாளில், பா.ரஞ்சித்தை அந்த ஏரியாவிலேயே காணோம். ஏன்?

இங்குதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராஜ தந்திரம் வெளிப்படுகிறது. தெரிந்தோ, தெரியாமலோ… புரிந்தோ புரியாமலோ இந்த கபாலி படத்திற்கு ஜாதி முத்திரை குத்திவிட்டது உலகம். ரஜினி ஏதோ குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவானவர் என்று உலகத்தை நம்பவும் வைத்துவிட்டார்கள். இது நல்லதற்கு இல்லை என்பதை மட்டும் சட்டென்று புரிந்து கொண்டார் ரஜினி. அதனால்தான் பத்திரிகையாளர் சோவை வரவழைத்து அவருக்கு ஸ்பெஷலாக இந்த படத்தை திரையிட்டும் காண்பித்துவிட்டார் என்கிறார்கள் இங்கே. அதை எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ல முடியும்?

சோ, ரஜினியின் நண்பராக மட்டும்தான் வந்தார் என்பார்கள். சோ ஒரு பத்திரிகையாளராக வந்திருக்கலாம் என்பார்கள் சிலர். ஆனால் சொல்கிற அவர்களுக்கே தெரியும், ஏன் சோ அங்கு வரவழைக்கப்பட்டார் என்பது.

விஷயம் இருக்கிறது. ரஜினி நடித்து எத்தனையோ படங்கள் இதற்கு முன் வந்திருந்தாலும், ஒரு முறை கூட சோ அந்த படத்தின் காட்சிகளுக்காக அழைக்கப்பட்டதில்லையாம். அதுமட்டுமல்ல, அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் ஒரு தியேட்டருக்குள் படம் பார்ப்பதை, அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீடியோ எடுத்து வெளியிட்டதும் இல்லை. அந்த அனுமதியும், எடுத்த வேகத்தில் அதை மீடியாவுக்கு கொடுக்க வைத்த சுதந்திரமும், ராஜ தந்திரமன்றி வேறென்ன? என்று கேள்வி எழுப்புகிறது கோடம்பாக்கம்.

கலைஞருக்கு காலை வணக்கம். அம்மாவுக்கு அந்தி வணக்கம் என்று ரஜினியின் அரசியலில் எப்போதும் ஒட்டிக் கொண்டு நிற்கும் ‘பேலன்ஸ்’. கபாலி விஷயத்திலும் நடக்கிறதே…. அதுதான் ரஜினி!

Leave A Reply

Your email address will not be published.