ஒரே அமுக்கு! தப்பிப்பாரா விஜய்?

3

கருப்பு வெள்ளை காலத்திலிருந்து கலருக்கு மாறிவிட்டது சினிமா. ஆனால் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரைக்கும் மாறாத சமாச்சாரம் கருப்பு வெள்ளை பரிமாற்றம்தான். ‘முழு சம்பளத்தையும் ஒயிட்லயே கொடுத்துருங்க. அதற்கு ஜி.எஸ்.டியும் நீங்களே கட்டிடுங்க’ என்று அஜீத் மாதிரியான ‘டாப்’பர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவரைவிட பெருத்த சம்பளத்தை நோக்கி போய் கொண்டிருக்கும் விஜய், கருப்பு பாதி…வெள்ளை மீதி என்று குறுக்கு சால் ஓட்டியதால் வந்த விளைவுதான் இந்த ரெய்டு என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

அதுமட்டுமல்ல, தனது படங்களில் அவர் ஜி.எஸ்.டிக்கு எதிராக பேசிய வசனங்களும், மத்திய அரசை சீண்டுகிற விதத்தில் போட்டுத் தாக்கிய பஞ்ச்களும் தீரா கோபத்தை வரவழைத்திருக்கிறதாம். ‘ஆமான்யா… நான் ஜோசப் விஜய்தான்’ என்று சொல்கிற விதத்தில் லெட்டர் பேடில் ஜோசப்பையும் விஜய்க்கு முன் சேர்த்தாரல்லவா? அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

இப்படியொரு பிரச்சனை வரப்போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்த சில அனுபவஸ்தர்கள், ஏ.ஜி.எஸ் முதலாளியிடம், ‘வரப்போறாங்க… உஷார்’ என்று சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் அலட்சியம் காட்டினாராம். விஜய் தொடர்பான சில டாகுமென்டுகள் அங்கிருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிக்குனா சிதைச்சிடலாம் காத்திருந்த அரசியல்வாதிகள் இனி சப்பாத்தி மாவு போல விஜய்யை பிசையத் தொடங்குவார்கள்.

1500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலா அண் கோவுக்கே ‘வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து விளக்கம் கொடுங்க’ என்று நோட்டீஸ்தான் அனுப்பப்பட்டது. ஆனால் கையோடு இழுத்துப்போகிற அளவுக்கு விஜய்க்கு அழுத்தம் தரப்படுகிறது என்றால் அது எதனால்?

விஜய்யை வைத்து என்னவோ திட்டம் இருக்கு என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. விஜய்யின் மனதிலிருக்கும் வருங்கால முதல்வர் ஆசை ஆரம்பத்திலேயே அமிலம் ஊற்றி அணைக்கப்படலாம். அல்லது, தனியாக நின்று சிங்கிள் மெஜாரிடி பெற முடியாத ரஜினிக்கு முட்டுக்கொடு என்று வற்புறுத்தப்படலாம்.

பார்க்கலாம்… முடிவில் விஜய் யாராக இருக்கப் போகிறார்? கட்டபொம்மனா, அல்லது கட்ட தொரையா என்று!

3 Comments
  1. Senthil says

    Tax sariya kattalainna yevena iruntha yenna?

  2. Ajith says

    OUR BELOVED SUPER STAR RAJINI WILL BECOME THE NEXT CHIEF MINISTER OF TAMIL NADU

  3. Ram says

    Tax kattalaina yenna konchava mudiyum?

Leave A Reply

Your email address will not be published.