ராணுவம் வந்தால்தான் எதிர்ப்போம்! போலீஸ் வந்தா வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டோம்!

ஓடி ஒளிந்த புரட்சித் தமிழன்!

2

கையில் மைக் கிடைத்தால், கொஞ்ச நேரத்திற்கு முன்பு சாப்பிட்ட ஆட்டுக்கறி செரிக்கிற அளவுக்கு குடலிலிருந்தே குரல் கொடுப்பதுதான் சத்யராஜின் விளம்பர அரசியல். இலங்கை பிரச்சனை, காவேரி பிரச்சனை என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் முழங்கிய சத்யராஜ், களத்தில் போராட்டம் என்றால் மட்டும், “ஒசரமா ஒருத்தரு இங்கதானேய்யா இருந்தாரு. சட்டுன்னு மறைஞ்சுட்டாரு” என்கிற அளவுக்கு நடந்து கொள்வார்.

இந்த நோட்டீஸ் பாயின்ட்டை நோட்டீஸ் பண்ணாத இளைஞர் கூட்டம், அந்த நேரத்தில் கைதட்டி, அந்த நேரத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தது. அதெல்லாம் போன சில தினங்களுக்கு முன்பு வரைக்கும்தான். இனி எங்காவது இந்தாளு முழங்குறதை பார்த்தேன்… அவ்வளவுதான் என்று எரிச்சலாகிற அளவுக்கு அவரது நிஜ முகம் பிளாஷ் ஆகிவிட்டது நேற்று.

சென்னையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் கூடினார்கள். ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை’ என்ற புதிய அமைப்பை துவங்கியிருக்கும் பாரதிராஜா, அதன் தலைமையில்தான் இந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். நாம் தமிழர் சீமான், இயக்குனர் வெற்றி மாறன், தங்கர்பச்சான், உள்ளிட்ட பல்வேறு இனமான இயக்குனர்களும் அங்கு இருந்தார்கள்.

இந்த தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் முதல் நாள் பிரஸ்மீட்டில் முழங்கிய அந்த ஒசரமான மனுஷன், இந்த கூட்டத்தில் ஆளையே காணவில்லை. ராணுவமே வந்தாலும் எதிர்போம் என்று குடல் வற்றுகிற அளவுக்கு ரஜினிக்கு முன் பொங்கிய அந்த நபர், இப்ப போலீஸ் தலையை பார்த்ததும் காரை ரிவர்ஸ் எடுத்துட்டு ஓடிட்டாரா என்று சந்தேகம் வர… நாலாபுறம் தேடிப் பார்த்தார்கள் உணர்வாளர்கள்.

அதுவா? அவரு தன் வீட்டின் ஆறாவது ரூம்ல, மூணாவது மூலையில அடக்கமா செட்டில் ஆகிட்டார் என்றார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ஒங்க புரட்சி இம்புட்டுதானா ஒசரம்?

2 Comments
 1. Raj says

  Enna Andhanan sir.. ipdi solitinga..
  Thats fine..
  1.but seeman anyway will be arrested.. blocking and beating the police at that moment is not going to save him from arrest..
  2. sathyaraj might have personal emergency.. who knows… he will definitely come next time

 2. கிரி says

  “அதெல்லாம் போன சில தினங்களுக்கு முன்பு வரைக்கும்தான். இனி எங்காவது இந்தாளு முழங்குறதை பார்த்தேன்… அவ்வளவுதான் என்று எரிச்சலாகிற அளவுக்கு அவரது நிஜ முகம் பிளாஷ் ஆகிவிட்டது நேற்று.”

  என்னமோ சாத்தியராஜ் இதுக்கு முன்னாடி ஒழுங்கா இருந்த மாதிரியும் இப்ப தான் இப்படி செய்து விட்ட மாதிரியும் இனிமேல் யாரும் கண்டுக்க மாட்டாங்க என்பது மாதிரியும்.. :-)

  இன்னொரு முறை பேசினாலும் புரட்சி தமிழன் வாழ்க என்று கூற ஆட்கள் இருக்கிறார்கள். எங்க அடித்தால் / பேசினால் ஆதரவு கிடைக்கும் என்று தங்கத்தலைவனுக்கு தெரியும்.

Leave A Reply

Your email address will not be published.