எஸ்.எஸ்.ராஜமவுலி மீது நடவடிக்கை பாயுமா? மத்திய அரசு ‘திருதிரு ’

1

சரித்திரக் கதையின் நாசியில் ஆக்சிஜனை செலுத்தி, பாகுபலியையும், பல்வாள்தேவன்… தேவசேனாக்களையும் உயிரோடு நடமாட விட்டுவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இன்னமும் ஆச்சர்யம் விலகாமல் அவரையும் அவரது படைப்பையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது சினிமாவுலகம். “சினிமான்னா நாங்கதாண்டா…” என்று மார்தட்டிக் கொண்டிருந்த ஹிந்திய ‘கான்’களின் மனசில் கல்லை தூக்கிப் போட்ட இந்த படைப்பாளி மீதுதான் எரிமலை கண் கொண்டு நோக்குகிறது சுற்றுசூழல் ஆர்வலர்களின் கோபம்!

இந்தப்படக் காட்சிகளில் பாதி கிராபிக்ஸ் என்றாலும், விண் முட்டும் செட்டுகள் என்னவோ நிஜம். இதற்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்ட்ர் ஆப் பாரிஸ், பிளாஸ்ட்டிக், பைபர், கெமிக்கல் பொருட்கள் எல்லாம் இப்போது மலை போல குவிந்து கிடக்கிறதாம். இன்னும் நூறு வருஷங்கள் ஆனாலும் இவை மக்கிப் போகும் ரகமல்ல. இவற்றால் சுற்று சூழல் கெடுவது நிச்சயம் என்கிறது சுற்றுசூழல் ஆர்வலர்களின் பெருமூச்சு.

இந்த குற்றத்தை புரிந்த ஒரு காரணத்திற்காகவே எஸ்.எஸ்.ராஜமவுலி மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆத்திரப்படும் அவர்கள், முறையான புகார் மனுவை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கிறார்களாம். ஆனால் பாகுபலி படத்தின் முதல் பாராட்டே மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடமிருந்தும், பாரத பிரதமர் மோடியிடமிருந்தும்தான் வந்தது. அது ஒருபுறமிருக்க… இது எங்க டைரக்டரின் படைப்பு என்று மார்தட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாகுபலிக்கு ஆஸ்கர் விருது தர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அப்புறம் எப்படி நடவடிக்கை இருக்கும்? இருந்தாலும்,

தேர் சக்கரம் உருளும்போது சில பொட்டு பூச்சிகள் அடிபட்டுதான் ஆகணும். அதுக்கு என்ன செய்வதாம்?

1 Comment
  1. ரவி says

    ஏன்டா வெங்காயம் இவனுங்க பணம் சம்பாரிக்க நாட்ட ஏன்டா நாசம் ஆக்குறானுங்க

Leave A Reply

Your email address will not be published.