அமைச்சர் ஸ்டிரிக்ட்! அதிகாலை காட்சிகள் ரத்தாகுமா?

0

பேட்ட, விஸ்வாசம் படங்களின் ரிலீஸ், ரஜினி அஜீத் ரசிகர்களின் ரத்தத்தில் சோடாவை குலுக்கி அடித்திருக்கிறது. பொங்கும் நுரையுமாய் அந்த த்ரில் நிமிஷத்திற்காக காத்திருக்கிறார்கள் அவர்கள். இந்த அரிப்பை சொறிந்து கொள்ள ஆயிரங்களும் ரெண்டாயிரங்களும் அநாயசமாக தூக்கி எறியப்படுகிற காட்சியையும் நாடெங்கிலும் காண முடிகிறது.

நள்ளிரவு ஒன்றரை மணி ஷோ, அதிகாலை மூன்று மணி ஷோ என்று நேரம் குறித்துக் கொடுத்த தியேட்டர்காரர்கள் அந்த சூடு குறையாமல் முதல் மூன்று நாட்களையாவது கடத்திவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்களை கரெக்ட் பண்ணிவிட்டால், அமைச்சராவது… உத்தரவாவது… என்கிற முடிவையும் அவர்கள் எடுத்திருப்பதாக தெரிகிறது.

ஆனால்? இவர்களின் நம்பிக்கையை கொத்தாமல் விட மாட்டார் போலிருக்கிறது அமைச்சர் கடம்பூர் ராஜு. அரசு சொன்னதை யாரும் கேட்பதாக இல்லை. நினைத்தபடி ஸ்பெஷல் ஷோ நடக்கப் போகிறது என்கிற விஷயத்தை அவர் காதுக்கு கொண்டு சென்றார்களாம். அதற்கப்புறம் சற்றே எரிச்சலான அமைச்சர், அதிகாரிகளை அழைத்து கடுமையான உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஒருவேளை அரசு உத்தரவை மீறி எங்காவது நள்ளிரவு காட்சிகளோ, அதிகாலை காட்சிகளோ நடந்தால் அந்த தியேட்டரில் ரெய்டு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம். சம்பந்தப்பட்ட தியேட்டர்களுக்கு அபராதம், லைசென்ஸ் ரத்து என்கிற அளவுக்கு சீரியஸ் ஆகியிருக்கிறார் அமைச்சர்.

அமைச்சரின் இந்த திடீர் முடிவாலும் அதிரடி உத்தரவாலும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்களாம் தியேட்டர்காரர்கள்!

பின்குறிப்பு- அதிகாரிகள் விதிக்கிற அபராத தொகையை விட, கலெக்ஷன் கன்னாபின்னா என இருக்கும் என்பதால், அதிகார மிரட்டலுக்கு யாரும் அஞ்சப் போவதில்லை என்பது திரையுலகத்தினரின் யூகம்!

ஏறி மிதிக்கிற யானை, ஸாரி கேட்டா சரியாப்பூடும்!

Leave A Reply

Your email address will not be published.