உலக ஹிப் ஹாப் நடன சாம்பியன்ஷிப் போட்டிகள்

0

இந்தியாவில் நடத்தபடுகின்ற ஹிப்-ஹாப் நடன போட்டிகளிலேயே, கடந்த 2012ம் ஆண்டு முதல் திரு. அஞ்சன் சிவக்குமார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வரும் “இந்திய ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகள்” மிகவும் பிரபலமானது.

இதன் முக்கிய அம்சம் யாதெனில் இதில் வெற்றி பெறுபவர்கள், அமெரிக்காவில் நடைபெறும் உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள். கடந்த2015ம் ஆண்டு நடைபெற்ற உலக ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கமும், லாஸ் வேகாஸில் 2016ம் ஆண்டில் நான்காவது இடமும், 2012ம் ஆண்டிலேயே இறுதி 8 போட்டியாளர்களில் இடம்பிடித்து சரித்திரம் படைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து அஞ்சன் சிவகுமார் கூறுகையில்,

“சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் எங்களுக்கு அளித்த உதவியும், ஆதரவும் மிகவும் நன்றியோடும் நெகிழ்ச்சியோடும் நினைவு கூறத்தக்கது. இந்த ஆண்டும் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்வது சம்பந்தமாக, சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு செல்ல இருக்கிறோம். இந்த ஆண்டும், அவர்கள் இந்திய நடன கலைஞர்கள் மற்றும் குழுவினர் உலக மேடையில் ஜொலிக்க உதவி புரிவார்கள் என்று திடமாக நம்புகிறோம். இந்த ஆண்டிற்கான உலக ஹிப் ஹாப் நடன சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெற்ற குழுக்களாக வீ கம்பெனி [V company – WWinners of Dance + TV RReality Show], எக்ஸ்1எக்ஸ் குழுவினர் [X1X Crew – FFinalists at India Banega Manch TV Reality Show], ஷோ ஸ்டாபெர்ஸ் குழுவினர் [Showstoppers Crew – Bronze medalist at Indian Hip Hop Dance Championship 2017], டி பைரேட்ஸ் குழுவினர் [D Pirates [Bronze medalist at Indian Hip Hop Dance Championship 2017] ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்”.

“எங்கள் அமைப்பு, உலக அரங்கில் நடனம், கலை, மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் நடைபெறும் போட்டிகளில், இந்தியா முதல் இடம் பெறவேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு தன்னலமற்ற தன்முனைப்போடுச் செயல்பட்டு வருகிறது. மேலும், நடன கலைஞர்கள் போட்டி முடிந்து திரும்பியவுடன், சென்னை அமெரிக்க தூதரகம் எங்களுக்கு அளித்து வரும் உதவிகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் இந்தியாவின் சார்பில் போட்டியில் பங்கேற்ற அத்தனை குழுக்களும், நடன கலைஞர்களும் இடம் பெறுவார்கள் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்”.

Indian Hip Hop Dance Championship, conceived by Anjan Sivakumar stands to be the most celebrated dance events in the country since 2012 where the best dancers get to represent the country at World Hip Hop Dance Championship USA. We have achieved several laurels so far for the country including Bronze Medal at World Hip hop Dance Championship USA 2015, reaching Top 4th place at World Hip Hop Dance Championship 2016 USA Las Vegas, making history in 2012 by reaching the top 8 in Grand Finale

We feel extremely humbled to have received a great support from the Chennai consulate in the last 6 years and help make India proud Internationally at several occasions. This year we are planning to visit the US consulate in chennai in next couple of days and we hope that this year the US consulate will support us and our Indian dancers to shine once again on World Stage.

The dancers who have been nominated for World Hip Hop dance Championship USA Phoenix, Arizona from 7th- 12th August 2017 includes India’s well renowned dancers including V company [winners of Dance+ TVreality show], X1X Crew [finalists at India Banega Manch TV reality show], Showstoppers Crew [bronze medallist at Indian Hip Hop dance Championship 2017], D Pirates [bronze medallist at Indian Hip Hop dance Championship 2017], I Crew

Our organization aims to put India front in the world in the field of dance, arts and culture and work towards achieving this dream. Once the team is back from the World Championship 2017, it would be an honor to extend our gratitude to the US Chennai consualte by hosting a celebration event inviting Chennai consulate for supporing us so far for the past 6 years. This event will have the dancers who represented the country at World Hip Hop Dance Championship USA 2017 perform exclusively for the Chennai US consulate and public from across the country.

Leave A Reply

Your email address will not be published.