நீங்க பிட்டு பட வெறியரா? அப்படின்னா அவசியம் படிங்க!

0

‘பிட்’டு பட வெறியர்கள் அத்தனை பேருக்கும் பரிச்சயமான ஒன்றுதான் எக்ஸ் வீடியோஸ்.காம். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் கச்சா முச்சா தளங்களில் டாப் மோஸ்ட் ரசிகர்களை கொண்ட தளம் இதுதான். (உங்களுக்கொரு விஷயம் தெரியுமா? தமிழின் முன்னணி நடிகைகள் இருவரின் ச்சீய்… வீடியோஸ் இந்த தளத்திலிருக்கிறது)

இந்த இணையதளத்தின் பெயரையே தன் படத்தின் தலைப்பாக கொண்டு ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார் டைரக்டர் சஜோ சுந்தர்.

அப்படியென்றால் படத்தில் ஏகப்பட்ட கச்சா முச்சாக்கள் இருக்குமே? அங்குதான் சொசைட்டி மீதிருக்கிற அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார் இவர். “ஆபாச இணையதளங்கள் பற்றி சொல்ற படம்தான் இது. ஆனால் படத்தில் ஆபாசம் இருக்காது” என்கிறார். (உங்க ட்ரெய்லரை பார்த்தா அப்படி தெரியல பாஸ்)

தினந்தோறும் எக்ஸ் படங்களை பார்க்கும் நண்பர் ஒருவர் இவருக்கு ஒரு லிங்க்கை அனுப்பி வைக்க… ஓப்பன் பண்ணிய சஜோ சுந்தருக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி. அந்த ஆபாச படத்தில் இருந்தவர், இவரது நண்பனின் மனைவி. தம்பதிகள் உற்சாக மூடில் இருந்த நேரத்தில் அவர்களே எடுத்துக் கொண்ட வீடியோ எப்படியோ கசிந்து ஆபாச இணையதளத்தில் வெளியாகிவிட்டது.

அதற்கப்புறம் இது குறித்த ஆராய்ச்சியை இரண்டு வருடங்கள் மேற்கொண்ட சஜோ சுந்தருக்கு அடுக்கடுக்காக அதிர்ச்சி. நாம் செல்போனில் டவுன் லோட் செய்யும் இலவச ஆப் நிறுவனங்களுடன் இந்த ஆபாச இணையதளங்கள் தொழில் உறவு வைத்துக் கொள்ளுமாம். அப்புறம்? அந்த ஆப்கள் மூலம் நம் செல்போனிலிருக்கிற அந்தரங்க படங்களை அவர்களாகவே எடுத்துக் கொள்வார்களாம். அப்படி போனதுதான் நண்பரின் மனைவி இருந்த ஆபாச வீடியோ.

இந்த மாதிரி சமாச்சாரங்களால் எப்படி பல குடும்பங்கள் நாசமாகின்றன என்பதை, ஆங்காங்கே உதற விடுகிற வண்ணம் படமாக்கியிருக்கிறாராம் டைரக்டர் சஜோ சுந்தர். இப்படத்தில் முன்னணி நடிகைகள் யாருமே நடிக்க அஞ்சிய நிலையில், ஆஹிருதி சிங் என்ற புதிய நடிகை மட்டும் “அதுக்கென்ன நடிச்சுட்டா போச்சு” என்றாராம்.

வேண்டி விரும்பி கேட்காமலே இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் அடல்ட் படங்கள் ஓடுகிற நேரமாச்சே… ஹரஹரமஹாதேவகிக்கு நன்றி சொல்லி, தியேட்டர்ல எக்ஸ் வீடியோஸ்சை ஓட விடுங்க!

முக்கிய குறிப்பு- இரண்டு வருஷ ஆராய்ச்சி முடிவுக்கு பின் நாட்டு மக்களுக்கு சஜோ சொல்லும் அட்வைஸ் என்ன தெரியுமா? செல்போனை பெட் ரூம்ல வைக்காதீங்க. உங்க கை படாமலே அதை ஆன் பண்ணுகிற வித்தை ஆப் மூலம் வந்திருச்சு என்பதுதான்!

Leave A Reply

Your email address will not be published.