ஆமாண்டா… நான் கிறிஸ்துவன்தான்! பொளேர் என்று போட்ட விஜய்!

0

‘மெர்சல்’ படத்திற்கு பின் நாட்டில் ஏற்பட்ட சலசலப்பு பற்றி இனி முன்னுரை தேவையில்லை. விஜய்யை ‘ஜோசப் விஜய்’ என்று வர்ணித்தனர் பி.ஜே.பி யின் தலைவர்கள். அதிலும் எச் ராஜா, விஜய் கிறிஸ்துவர் என்ற விஷயத்தை அவரே புலனாய்வு செய்து கண்டுபிடித்ததை போல பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். இந்த விவகாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை கூட வெளியிட்டார். விஜய் குமுதத்திற்கு எழுதிய நன்றி கடிதத்தையும் வெளியிட்டிருந்தார்.

இன்று வரை எல்லாவற்றுக்கும் மவுனம் காத்த விஜய், இன்று நாசுக்காக… அதே நேரத்தில் அழுத்தமாக ஒரு விஷயத்தை பதிய வைத்திருக்கிறார். அதில் ஒளிந்திருக்கும் ‘ஆமாண்டா… நான் கிறிஸ்துவன்தான்’ என்கிற பதிலை எத்தனை பேர் புரிந்து கொள்வார்களோ? நிச்சயம் எச் ராஜா கோஷ்டிகளுக்கு புரியும்.

ஜோசப் விஜய் என்று அச்சிடப்பட்டுள்ள அவரது லெட்டர் பேடில் இந்த நன்றிக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த லெட்டர் பேடின் மேல் பகுதியில் ‘ஜீசஸ் சேவ்ஸ்..’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தை மாபெறும் வெற்றியடைய வைத்த தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் விஜய். அந்த கடிதம் கீழே-

பின்குறிப்பு- எப்போதும் தனது பெயரில் அறிக்கை அனுப்பும் விஜய் அதில் எந்த இடத்திலும் கையெழுத்திட மாட்டார். இந்தக்கடிதமும் அப்படிதான் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், விஜய்யின் அதிகாரபூர்வ மக்கள் தொடர்பாளர் கே.ரியாஸ் இதை அனுப்பியிருப்பதால், இது விஜய்யிடமிருந்துதான் வந்துள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.