உருப்படாதவர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்த யோகிபாபு?

0

நிற்கக் கூட நேரமில்லாமல் அலைந்து அலைந்து வாய்ப்பு தேடிய யோகிபாபுவுக்கு இப்போது நிற்கக்கூட நேரமில்லை. இறைவனின் திருச்சபையில் கிண்டப்பட்ட பஞ்சாமிர்தம் டப்பியோடு வழங்கப்பட்டுவிட்டது யோகிபாபுவுக்கு! தினந்தோறும் இரண்டு படங்கள். காலையில் ஒன்று. மாலையில் ஒன்று என றெக்க கட்டி பறக்கிறார் மனுஷன். கல்லாபெட்டியிலும் கம்பீரம் ஏறிவிட்டது.

உழைப்பவனுக்கெல்லாம் உதாரண புருஷனாகிவிட்ட யோகிபாபுவை, உசுப்பேற்றி உசுப்பேற்றியே வாழக்கிளம்பிவிட்டது ஒரு கும்பல். இந்திரனே… சந்திரனே… நீ இல்லேன்னா தமிழ்சினிமாவே இல்ல. உன் புன் சிரிப்புதான் இந்த பூமிய சுழல வைக்குது. உன் வெடிச்சிரிப்பை கேட்டுதான் பாகிஸ்தானே பல்லு விளக்குது ரேஞ்சில் புகழ்கிறார்கள். ஐயே… மெய்யாலுமா? என்று மெர்சலும் ஆகி வருகிறார் யோ.பா.

இந்த தலைகனத்தின் அடுத்த வெர்ஷன், ஸ்டார்ட்ஸ் ஃபிரம் டூமாரோ! என்னவாம்?

இவர் நடித்த ‘பட்டிப்புலம்’ என்ற படம் நாளை ரிலீஸ் ஆகிறது. தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் யோகிபாபுவின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யப் போகிறார்களாம் அவரது ரசிகர்கள்.

முன்னணி நடிகர்கள் பலர் தங்கள் ரசிகர்கள் செய்யும் இத்தகைய முட்டாள் தனங்களை தடுத்து நிறுத்த முனைவதேயில்லை. இந்த லட்சணத்தில் இந்த பக்கோடா வேறு எண்ணை சட்டியில் ஊறுவேனா… பால் பாக்கெட்டில் ஊறுவேனா என்கிறது.

இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சேதான் எம்ஜிஆர், சிவாஜியெல்லாம் முன்னாடியே போய் சேர்ந்தாங்க போலிருக்கு!

Leave A Reply

Your email address will not be published.