முதலை வாயும் மிஷ்கின் வாயும் ஒண்ணா? அச்சத்தில் அறிமுக நடிகர்!

0

கை மாத்தா வாங்குன பத்து ரூபாய்கே கழுத்தை சுற்றி துண்டு போடுகிற உலகத்தில், ஒரு கோடியை வாங்கிக் கொண்டு ‘ஏவ்…வ்’ என்கிறாராம் மிஷ்கின். இந்த அஜீரண ஆக்ஷனை கண்டு விழி பிதுங்கிப் போயிருக்கிறார் அறிமுக நடிகர் மைத்ரேயா. இது குறித்து நாம் ஏற்கனவே பதிவிட்டிருப்பதால் கோயிங் நெக்ஸ்ட்!

‘சைக்கோ’ படம் இவருக்காக செய்யப்பட்ட கதை. அதில் வேறொருவர் நடித்து வருவதால் முறைப்படி மிஷ்கினிடம் விளக்கம் கேட்டிருக்கிறது கோர்ட். அது மட்டுமல்ல, சைக்கோ க்ரைம் த்ரில்லர் கதைகளை படமாக்கக் கூடாது என்றும் அவருக்கு தடை விதித்துள்ளது. நடுவில் இந்த ஒரு கோடி அட்வான்ஸ் பற்றி மைத்ரேயன் தரப்புக்கு பதில் சொன்ன மிஷ்கின், ‘பணத்தை திருப்பி தர முடியாது’ என்றும் கூறி வருகிறாராம். இந்த தகவலை மைத்ரேயனே பிரஸ்சை கூட்டி சொன்ன பின்பும் நாடகத்தில் ஒரு சீனும் மாறவில்லை என்பதுதான் ஷாக்.

ஒரு பார்வையில்லாதவர் எப்படி தன் எதிரிகளை வீழ்த்துகிறார் என்பதுதான் சைக்கோ படத்தின் கதை. இதற்காக மைத்ரேயனை கண்ணை கட்டிக் கொண்டு கம்பி மீது நடக்க பயிற்சி எடுக்க சொன்னாராம் மிஷ்கின். அந்த வித்தையையும் போராடி கற்றுக் கொண்ட இந்த அறிமுக ஹீரோவுக்கு, அப்படியாப்பட்ட கேரக்டர் போய்விட்டதே என்கிற வருத்தம் அந்த ஒரு கோடியை விடவும் பெரிதாக இருக்கிறது.

கடைசியில் நல்ல செய்தி ஏதாவது இருக்கணுமே? ஹரிதாஸ் பட இயக்குனர் ஜி.என்.குமாரவேலன் இயக்கத்தில் நடிக்கிறார் மைத்ரேயன்!

சினிமா யாருக்கும் முற்றுப்புள்ளி வைக்காது என்பதுதான் வரம்!

Leave A Reply

Your email address will not be published.