அக்கா வயசு நடிகைகளுக்கு அழைப்பு அமலாபால் தம்பியால் முணுமுணுப்பு

அமலாபாலின் தம்பி அபிஜித், தன் அக்கா வயசு நடிகைகளுக்கு அன்பு தொல்லை கொடுப்பதாக சினிமாவுலகத்தில் ஒரு கிசுகிசு கேட்க ஆரம்பித்திருக்கிறது. இத்தனைக்கும் என்ஜினியரிங் படிக்கணும் என்று சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தவர் அவர்.

அக்கா தலையெடுக்க ஆரம்பித்ததும், தம்பியின் படிப்பு தானாக தொங்கிவிட்டது. இப்போது அமலாவின் அதிகாரமிக்க மேனேஜர் அவர்தானாம். தமிழ்நாட்டில் பெட்ரோல் கூட ஆறாக பெருகி ஓடலாம். அரபு நாடுகளுக்கும் ஆயில் சப்ளை செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு ஹீரோயினை தேடி கண்டு பிடிப்பது மட்டும் வெண்ணையை கொட்டி அதில் வீல் சேரை ஓட்டிய கதையாகிவிடும். இந்த ஒரு கஷ்டத்தினாலேயே எவ்வளவு குடைச்சல் கொடுத்தாலும் கேரளாவில் போய் ரேக்ளா ரேஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நம்ம இயக்குனர்கள். இவர்களின் அலைச்சலை பயன்படுத்திக் கொண்டு முடிந்தவரை தன்னை தேடி வருகிறவர்களுக்கு டார்ச்சர் கொடுக்கிறாராம் தம்பி.

கால்ஷீட் கேட்பவகளிடம் கட்டிங் போடுவது. ஷுட்டிங் ஸ்பாட்டில் அக்காவுடன் நடிக்க வரும் துணை நடிகைகளுக்கு ஃபிட்டிங் போடுவது என்று ரூட்டே மாறிவிட்டதாம் தம்பிக்கு. அக்காவின் காதுகளுக்கு விஷயத்தை கொண்டுபோக தயங்கும் சிலர் பிரஸ் மூலம் அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அக்கா காதுல விழுந்திருக்குமே இந்நேரம்…

Amala Paul’s brother stoops to unethical practices

Abhijit the younger brother of actress Amala Paul is said to be into unethical practices with film makers and other female artistes. Abhijit who came to Chennai to study Engineering has become full time Manager for his sister now. It is heard that he is asking for a ‘cut’ from the film makers, to get the call sheet from his sister. He is also said to be indulging in indecent ways with female artistes who play a role in the film with his sister. Some film makers who earlier were bearing these are trying to bring this to the attention of his sister through media now. Hope by not it must have reached to Amala Paul, by now!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மதயானை கூட்டம் விமர்சனம்

கறிக்கடை பாய்க்கே கத்தி பிடிக்க கற்றுக் கொடுப்பார் போலிருக்கிறது அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன். படத்தில் குறிப்பிடும் சாதியினர், இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும், அரசுத்துறையில் பலமானவர்களாகவும் ஏன்......

Close