‘ அசத்திட்டீங்க…. ’ ஏ.ஆர்.முருகதாசிடம் பாராட்டு பெற்ற இயக்குனர்

தமிழ்சினிமாவின் பிதாமகர்கள் என்று சொல்லப்படும் பாரதிராஜா, பாலசந்தரிடம் தொழில் கற்றுக் கொண்டு வந்தவர்கள் கூட நாற்காலியை முக்காலியாக்கி, அந்த முக்காலியையும் முடியாத காலியாக்கிவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள், பச்சை பசேலென்று பறைசாற்றிக் கொண்டிருக்கிறது தன் குருநாதரின் பெயரை. ‘எங்கேயும் எப்போதும் சரவணன்’ தொடர்ந்து இப்போது ‘கம்பன் கழகம்’ பட இயக்குனர் அஷோக்கும் அந்த லிஸ்டில் வைக்கப்பட வேண்டிய நபராக இருக்கிறார். அவரது இந்த ஷோக்கான படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் பார்த்தாராம் ஏ.ஆர்.முருகதாஸ். (அந்த தகவலையே இப்பதான் கசிய விடுகிறது இந்த படக்குழு. அதுவும் படம் வெளியாகும் நேரம் பார்த்து. பொழச்சீப்பீங்க பிரதர்…) இன்டர்வெல்லில் கண்கலங்கிய முருகதாஸ், ‘நீங்க எடுத்திருக்கிற படத்தை பார்த்தா நான் எடுத்த ‘எங்கேயும் எப்போதும்’ சின்னப்படம் போல தெரிகிறதே’ என்று பாராட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் வசனங்கள் இயல்பாகவும், பளிச்சென்று கவனத்தை கவர்கிற வகையிலும் இருக்கும். அவரது பாணியிலேயே கம்பன் கழகம் படத்தில் வசனங்கள் இடம்பெற்றிருப்பதையும் கவனித்த ஏ.ஆர்.முருகதாஸ். அதையும் சுட்டிக்காட்டி பாராட்டினாராம்.

ஒரு படத்தின் காட்சிகளை சீட்டிங் செய்து எடுப்பது கோடம்பாக்கத்திற்கு புதுசல்ல. அதாவது பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம் பக்கத்தில் ஒரு போர்டை நட்டு அதில் சென்னை அண்ணாசாலை என்று எழுதுகிற அளவுக்கு போகும் அந்த சீட்டிங். ஆனால் பாண்டிச்சேரியில் படம் எடுத்தால் சிக்கனம் என்று கருதி அங்கே போன அஷோக், கதையே அங்கு நடப்பதாக எடுத்திருப்பதுதான் அவரது நேர்மைக்கு அடையாளம் என்கிறார்கள் படக்குழுவினர்.

சிக்கனத்திற்கு பாண்டிச்சேரி என்றாலும், கதைக்கு தேவைப்பட்டால் ஏர்போர்ட் லொகேஷனை கூட எக்கச்சக்க பணம் கட்டி ஷுட்டிங் எடுப்பார் போலிருக்கிறது அஷோக். யெஸ்… இந்த படத்தின் முக்கிய காட்சிகள் சில ஏர்போர்ட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு முக்கிய தகவல். இந்த படத்தின் தயாரிப்பாளரும் அஷோகன்தான். கோடம்பாக்கத்தில் எங்கு திரும்பினாலும், கம்பன் கழகம் நல்லாயிருக்காம் என்கிற கிசுகிசுப்புகள் பரவலாக கேட்டாலும், நல்ல தியேட்டர்கள், ரிலீஸ் தேதி இல்லேன்னா எவ்வளவு நல்ல படமும் கோவிந்தாதான். அதனால் ‘ஐ எம் வெயிட்டிங்…’ என்கிறார் துப்பாக்கி விஜய் மாதிரி.

தோட்டாவாக சீற வேண்டிய நேரம் வந்தாச்சு. புறப்படுங்க பிரதர்…!

Murugadoss lauds his assistant Ashok’s film Kamban Kazhagam

Director Saravanan of Engeyum Eppodhum has established a niche for himself in Kollywood by telling that the film is not a fluke by his impressive second film Ivan Vera Mathiri. Saravan was a former assistant of director Murugadoss who was elated by his assistant’s success.

Now another assistant of Murugadoss is debuting as director in Kollywood. Ashok, former assistant to Murugadoss, has produced and directed his maiden venture, Kamban Kazhagam. Though the film was completed long time back, Ashok is waiting in the wings to get good theatres to exhibit the film.

Ashok had a special screening of the film for Murugadoss who was overwhelmed with the film. During the interaction with his former assistant, he lauded him that the dialogues were simple, natural while at the same time carry weight. He lauded the picturization of the story with subtleness, saying the film Kamban Kazhagam appears to be better than his own Engeyum Eppodhum which made the student elated.

Though shooting at Puduchery is comparatively cheaper than shooting at Chennai, Ashok went to Puduchery to shoot only because the story happens at Puduchery. He also canned some of the scenes at Airport paying exorbitant fees, as some of the scenes happen at the Airport.

Already those in the know of Kamban Kazhagam talk high of the film, which means we can expect another Engeyum Eppodhum of sort from Murugadoss’ assistant.

Read previous post:
டாப்ஸி சம்மதித்தது எதற்காக?

அழகும் திறமையும் இருந்தும் கோடம்பாக்கத்தில் தடுக்கி விழுந்து தனக்கு பின்னால் வந்தவர்களையும் முன்னால் ஓட விட்டு வேடிக்கை பார்த்தவர் டாப்ஸி. வெள்ளாவியில் வைத்து வெளுத்த பெண்ணை, விதி...

Close