அசிங்கமாக திட்டிய இயக்குனர் அழுதுகொண்டே கேரவேனுக்கு ஓடிய ஹன்சிகா படப்பிடிப்பு பரபரப்பு

உங்களுக்கெல்லாம் நயன்தாராதான்யா சரிப்பட்டு வருவாங்க… இவரை மாதிரி அப்பாவிங்க கிடைச்சா அருவாள தீட்டிருவீங்களே…. ஒரு டைரக்டரை பார்த்து ஹன்சிகா மோத்வானியின் ஜால்ரா கோஷ்டிகள் இப்படி குமுறினால் அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் டைரக்டரின் நாக்கு அப்படி. அதிலிருந்து வந்த தீச்சொல் அப்படி. (எதுக்கும் பயர் என்ஜினுக்கு சொல்லி வைக்கலாமா?)

கடந்த சில தினங்களுக்கு முன் பின்னி மில்லில் ‘மான்கராத்தே’ பட ஷுட்டிங் நடந்தது. இரண்டாயிரம் பேரை திரட்டி வைத்து முக்கியமான காட்சி ஒன்றை எடுத்துக் கொண்டிருந்தார் டைரக்டர் திருக்குமரன். காலையில் ஆரம்பித்த ஷுட்டிங் நள்ளிரவு இரண்டு மணி வரைக்கும் நீண்டு கொண்டே போனதாம். அடிக்கடி கேரவேனில் போய் ஓய்வெடுத்துவிட்டு வந்து வந்து நடித்துக் கொண்டிருந்தார் ஹன்சிகா. என்னை இரண்டு மணிக்குள்ள அனுப்பிடுங்க என்று அவர் காலையிலேயே கேட்டுக் கொண்டாராம். அப்படியிருந்தும் நள்ளிரவு தாண்டி விடியற்காலை இரண்டு மணியையும் தாண்டிக் கொண்டிருந்தது ஷுட்டிங்.

இதில் எரிச்சலான ஹன்சிகா, நான்தான் காலையிலேயே சொன்னேன்ல. இன்னும் நடி நடின்னா எப்படி? சீக்கிரம் முடிங்க என்று கூற, பணம் மட்டும் கோடி கோடியா கேட்கிறீங்க. இன்னும் கொஞ்ச நேரம் இருந்து நடிக்க மாட்டீங்களா என்று கையில் வைத்திருந்த மைக்கை கூட ஆஃப் பண்ணாமல் திருக்குமரன் சண்டை போட, அது அங்கிருந்த இரண்டாயிரம் பேருக்கும் கேட்டதாம். அவர்கள் பரிதாபமாக ஹன்சிகாவை பார்க்க, கோபத்தில் முகம் சிவந்தார் அவர். சட்டென்று அழுகையும் ஆத்திரமுமாக ஓடிப்போய் கேரவேனுக்குள் புகுந்து கொண்டாராம். இனி ஷுட்டிங் தொடருமா என்கிற நிலை.

படத்தின் தயாரிப்பாளர் மதன் சுதாரித்துக் கொண்டு கேரவேனுக்கு ஓடினார். அவரிடம் அழுகையும் ஆத்திரமுமாக ஹன்சிகா கோபப்பட, எப்படியோ தயாரிப்பாளரின் நல்ல மனசுக்காக மீண்டும் கேரவேனிலிருந்து கீழே இறங்கினாராம். கடைசிவரை திருக்குமரனும் ஸாரி கேட்கவில்லை. ஹன்சிகாவும் அவரை மன்னிக்க தயாராக இல்லை. மான் கராத்தே என்று பெயர் வைத்துவிட்டு மான்களிடம் கராத்தே போடுறீங்களே டைரக்டர்? நியாமா?

Hansika hurt by the director’s words!

Some time it is difficult to understand who is at fault at the work place. It may so happen at the work spot despite obtaining the permission to go early, sometimes it could not be possible to keep the job as it is and go, purely because of the responsibility. Recently a similar incident occurred during the shoot of Maan Karate. Hansika who plays the lead in the film, requested the director Thirukumaran in the morning itself to go by 2 pm in the afternoon. But the shoot was continuing till as late as 2 a.m. next day morning. Infuriated Hansika questioned the director about this, to which he should have explained the reasons politely. Of course he was also working right from morning with much more responsibility than the actress. Perhaps with that tense he responded angrily at her forgetting to switch off the mike even, telling her that she is receiving salary in crores and that she would do well to complete the shoot and go. Infuriated Hansika almost in tears ran towards her Caravan and did not return to shoot. It was the producer finally pleaded with her to cooperate after which she descended to the shoot floor. Neither the director Thirukumaran asked for apology nor Hansika in a mood to condone the director. While both are right with their perspective, both have responsibility to each other and they should understand it.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எந்திரன் பார்ட் 2 – மீண்டும் இணைகிறார்கள் ஷங்கரும் ரஜினியும்

எந்திரன் படத்திற்கு ரஜினி நடிக்கப் போகும் புதிய படம் என்ன? ராணா என்றார்கள். ஆனால் அது ரஜினியின் உடல்நிலை காரணமாக தள்ளிப் போய் தள்ளிப் போய் கடைசியில்...

Close