அஜீத்தின் ‘வீரம்’ ஆளும் கட்சியிடம் எடுபடுமா?
தேருக்கு ஒரு நீதி, வண்டிக்கு ஒரு நீதின்னு ஆகுமா தெரியலையே என்று கவலைப்படவும் காத்திருக்கவும் வைத்திருக்கிறது ஒரு செய்தி. விஷயத்தை வெளியே சொன்னால் அதன் ரிசல்ட்டுக்காக காத்திருக்கப் போவது நம்மை விட அஜீத் ரசிகர்களாகதான் இருக்கும். ஏன்? பிரச்சனையே அஜீத் படத்தை பற்றிதானே!
சிறுத்தை சிவா இயக்கும் ‘வீரம்’ படத்தை இப்போதே விலை கொடுத்து வாங்க போட்டா போட்டி. சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, கோவைன்னு பிரிச்சு விக்கிற வேலையை அப்புறம் வச்சுக்கலாம். முதலில் சேட்டிலைட் ரைட்சை மட்டும் விற்கலாம் என்று முடிவு செய்தது தயாரிப்பு தரப்பு. கேட் திறந்தால் போதாதா அஜீத் படங்களுக்கு. சுமார் பதிமூன்று கோடிக்கு இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கிறது அந்த இரண்டெழுத்து தொலைக்காட்சி.
இதிலென்ன பிரச்சனை? தலைவா படத்திற்கு வந்த பிரச்சனைதான். சேட்டிலைட் உரிமையை வேறொரு சேனலுக்கு விற்றுவிட்டார்களே என்கிற ஆத்திரத்தில்தான் தலைவாவை ‘தலை’ வேறு ‘வா’ வேறு ஆக்கினார்கள். அப்படத்திற்கு வரி விலக்கு கிடையவே கிடையாது என்றும் கூறப்பட்டது. இப்போதும் அதே தொலைக்காட்சிதான் அஜீத் படத்தை வாங்கியிருக்கிறது.
அப்படீன்னா…? ம்ம்ம்… அதேதான். என்னதான் அஜீத் படமாக இருந்தாலும், வியாபாரத்தில் அவர் தலையிடுவதில்லை என்பதால் இந்த முறை இந்த தவறு மன்னிக்கப்படும், மறக்கப்படும் என்றே தெரிகிறது.