அஜீத்திற்கே ஆட்டம் காமிக்கிறீங்களா…? – பொங்க பொங்க ஒரு பொருமல்!
பொங்க பொங்க பிரியாணி இருந்தாலும் போட்டு திங்க பிளேட் இல்லையே கதையாகிக் கிடக்கிறது புதுப்பட ரிலீஸ்கள். இதில் ஆணானப்பட்ட அஜீத்தையே அல்லாட விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது.
‘ஆரம்பம்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிக்கலாம் என்று கூறிவிட்டார் அஜீத். ஓட்டமும் நடையுமாக படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது இப்போது. படம் தீபாவளிக்கு வெளியீடு என்றும் அறிவித்து விட்டார்கள். தியேட்டர் பக்கம் போனால்தான் தீயாக எரிகிறதாம். தனது ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்காக நல்ல நல்ல தியேட்டர்களையெல்லாம் புக் பண்ணி அக்ரிமென்ட்டும் போட்டு விட்டார் அதன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
மிக சைலண்ட்டாக நடந்து முடிந்துவிட்டது இத்தனையும். அதற்கப்புறம்தான் ஆரம்பம் ரிலீஸ் என்கிற அறிவிப்பே வந்ததாம். ஒருசிலர், ‘அண்ணே… உங்க அக்ரிமென்ட்டை மாத்திட்டு ஆரம்பத்தை போட்டுக்கவா’ என்று கேட்டால், ‘அதெப்படி?’ என்கிறாராம் ஞானவேல்ராஜா. (ஒப்பந்தம் போட்டபின் இப்படி கேட்பதே தவறு என்பதுதான் சரி)
இவரை மீறி ஒப்பந்தத்தை கேன்சல் செய்யவும் முடியாது. ஏனென்றால் அஜீத் படம் வருடத்திற்கு ரெண்டு வருவதே பெரிய விஷயம். ஆனால் ஞானவேல்ராஜாவின் படங்கள் வருடத்திற்கு நாலைந்து வருகிறது. அதில் முக்கால்வாசி படங்கள் தாறுமாறாக ஹிட்டும் ஆகிவிடுகிறது. எனவே அஜீத்தா, ஞானவேலா என்று ஒப்பிடும் தியேட்டர்காரர்கள் உப்பிட்டவரைதான் உள்ளளவும் நினைப்பார்கள் போலிருக்கிறது.
அப்போ அஜீத்தின் ஆரம்பம்? முடிவே எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறதாம்….
(அஜீத் விஜய் படங்களுக்கு இப்படியெல்லாம் சிக்கல் வர ஆரம்பித்திருப்பதால், கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த முன்னணி ஹீரோக்கள் சிலரை வீட்டுக்கே அழைத்து பேசியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அவர் என்ன பேசினார் என்பதை எக்ஸ்க்ளுசிவ் தகவலாக வெளியிடப் போகிறது உங்கள் newtamilcinema.in. அதுவரை காத்திருங்கள் ரசிகர்களே….)
Read article in English-