அஜீத்தை மடக்குவதே லட்சியம் – பஞ்சாப்பிலிருந்து ஒரு பஞ்சுமிட்டாய் சபதம்!
கோதுமை விளையும் பஞ்சாபில்தான் பொம்மையும் அதிகம் போலிருக்கிறது. சிம்ரன், டாப்ஸி என்று பஞ்சாப் பதுமைகளை பார்த்த தமிழ்சினிமா ரசிகனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா ‘கட்டிங்’ கொடுக்கும் வேகத்தோடு ‘ ….ந்தா வந்துட்டேன்’ என்று முகம் மலர வந்திருக்கிறது ஒரு நடமாடும் டாஸ்மாக்!
பெயர் ப்ரீத்திதாஸ்.
ஒரு அறிமுக நடிகைக்கு ஒரு படம் வெளிவரும்போதே இன்னொரு படமும் ‘புக்’காகியிருப்பதுதான் பெருமை. அந்த அருமை பெருமைகள் எல்லாவற்றையும் தனது ஸோல்டர் பேக்கில் வைத்திருக்கிறார் ப்ரீத்தி. எப்படி? உயிருக்கு உயிராக படத்தில் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருக்கும் போதே மறுமுகம் என்ற படமும் கிடைத்திருக்கிறது. இப்போது இவ்விரு படங்களுமே வளர்ந்து ஆளாகி சந்தைக்கு வர தயாராகிவிட்டன.
தமிழ்சினிமாவுக்கு வந்த நாளிலிருந்தே அஜீத் மீது ஒரு கண்ணும் விஜய் மீது மறு கண்ணுமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் ப்ரீத்தி. எல்லா நடிகையும் என்னை மாதிரி புதுமுகமா வந்தவங்கதான். எனக்கு நம்பிக்கையிருக்கு என்று அவர் சொல்வது எதற்கென்று நினைக்கிறீர்கள்? மேற்படி இரு ஹீரோக்களையும் மடக்குகிற விஷயத்தில்தான். காலம் அவருக்கு அந்த சந்தோஷத்தை கொடுக்கட்டும் என்று வாழ்த்துகிற அதே நேரத்தில், நமது தமிழ்சினிமாவில் வெற்றிபெற என்னவெல்லாம் தியாகம் செய்திருக்கிறார் ப்ரீத்திதாஸ் என்கிற கேள்வியையும் அவரை நோக்கி எழுப்பினோம்.
முதல்ல லாங்குவேஜ் கத்துகிட்டதுதான் நான் செஞ்ச பெரிய சாதனை. அதுக்கு துணையாக இருந்த என் பட டைரக்டர்களுக்கு நன்றி சொல்லணும். ஷுட்டிங்கில் எந்நேரமும் என்னிடம் தமிழில்தான் பேசுவாங்க. முதல்ல தடுமாறினேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுது. இப்போ பேச முடியாவிட்டாலும் யார் தமிழில் பேசினாலும் அதை முழுசா புரிஞ்சுக்கிற அளவுக்கு வளர்ந்தாச்சு என்றார்.
நடிக்க வந்த பின் சொந்த மாநிலத்து நடிகைகளை தேடி தேடிப் போய் அட்வைஸ் கேட்கவும் ஆசைப்படுகிறார் ப்ரீத்தி. சிம்ரன், டாப்ஸி, சுனைனா, என்று இவருக்கு கிளாஸ் எடுத்த முன்னாள் இந்நாள் ராஜகுமாரிகள் ப்ரித்திக்கு சொன்ன ஒரே கியாரண்டி என்ன தெரியுமா? ‘தமிழர்களை நம்பு. அவங்க நம்பி வந்தவங்களை ஏமாத்த மாட்டங்க’ என்பதுதான். இது பற்றி இன்னும் பலமா தெரிஞ்சுக்கணும்னா திருச்சி மதுரை பக்கமா கோவில் குடமுழுக்குன்னு கொண்டாடப்படுகிற நடிகைகளையும் அவர்தம் ரசிகர்களையும் கொஞ்சம் விசாரிச்சுப் பாருங்க … ரொம்ப நல்லாவே புரியும் ப்ரித்திதாஸ்.
Preeti Das eyes on Ajith and Vijay
The latest import from Punjab, Preeti Das who is the female lead in Uyirukku Uyiraga had signed another film ‘Marumugam’ during the making of her former film, and now both films are readying for release. Meantime, she is eyeing to romance with Ajith and Vijay next, common for any newcomers, especially North Indian stars. When quizzed about her intent of making big in Kollywood, she confidently says she is learning the language thanks to the directors and unit members who converse with her in Tamil. She said, “Though I am still unable to converse fluently, I can understand the language completely”. When asked about how she would be able to pair with popular heroes here, she said, “Those who act with Ajith and Vijay were also newcomers once, so I am confident that I will be able to pair with them.”
In order to pursue her dream, she sought guidance and advice from former actresses, viz., Simran, Tamannah, Taapsee, Sunaina who made it big here. One feels good to hear what their advice was. They seemed to have told her to believe in Tamil(ian)s and they would not disappoint, but help. Well, Preeti Das seems to have take the advice close to her, as it can be seen from the confidence with which she speaks. As her first step towards her goal her first step was mastering Tamil language. Kudos Preeti!