அஜீத் சார்… நீங்க நல்லவரா, கெட்டவரா?

நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று அஜீத்திடம் கேட்டாலும் அதற்கான பதில் கிடைக்காது போலிருக்கிறது. தனிமனித ஒழுக்கத்தில் தங்கம் என்று பெயரெடுத்தாலும் சில விஷயங்களில் அவர் தகரமாக இருப்பதை குய்யோ முறையோ குரலோடு விவாதித்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். சமீபத்தில் அவர் செய்திருக்கும் ஒரு செயல், சிலருக்கு இன்ப அதிர்ச்சி. சிலருக்கோ பேரதிர்ச்சி. வேறொன்றுமில்லை, தனது அடுத்த படத்திற்கான சம்பளத்தை 25 கோடியாக உயர்த்திவிட்டார் அவர். இதிலென்ன வந்தது நஷ்டம்? தயாரிப்பாளர் கொடுக்கிறார். இவர் வாங்கிக் கொள்கிறார். படம் பார்த்தோமா, கையை தட்டினோமா என்று போகிற நமக்கென்ன வந்தது இதில்?

இருந்தாலும் இந்த 25 கோடியை சந்தோஷமாக தருகிற தயாரிப்பாளரை மேலும் கொஞ்சம் நெருக்குகிறாரே, அங்குதான் அதிர்ச்சி. இந்த பணத்தை வெள்ளையாக கொடுங்கள். நான் கருப்பில் வாங்குவதில்லை என்று கூறிவிட்டாராம். அது கூட நல்ல விஷயம்தான். அரவிந்த் கெஜ்ரிவாலே அஜீத்தின் வால்தான் என்கிற அளவுக்கு அதில் தன்னம்பிக்கையும் ஒழுக்கமும் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால்?

என்னய்யா ஆனால்? இந்த இருபத்தைந்து கோடிக்கு வருமான வரி முறையாக கட்ட வேண்டும் அல்லவா? அந்த வரியையும் தயாரிப்பாளரையே கட்ட சொல்கிறாராம். அப்படி பார்த்தால் சம்பளம் இருபத்தைந்து கோடியையும் தாண்டிப் போகிறதே என்று கருகி கருவாடாகிக் கொண்டிருக்கிறாராம் இவரை வைத்து அடுத்த படத்தை தயாரிக்கப் போகும் ஏ.எம்.ரத்னம்.

அஜீத்தின் கால்ஷீட் வரமா, சாபமா?

Ajith demands salary in white, but ………..

Ajith after back to back success of his films – Arrambam and Veeram – seems to have increased his salary to Rs.25 crores. There is nothing new in it as all heroes will raise their salary after the success of their films. When Ajith films give phenomenal opening and Box Office collections to the producers, there is nothing wrong to his hiking his salary.

But the point is he asks his salary to be paid in full in white. Wow. That too enhances his reputation as honest person paying his dues to the government. In fact it got to be appreciated.

However there is small hitch. Ajith has asked his producer to pay the income tax payable on his salary of Rs. 25 crores. Producer Rathnam is aghast with the demand of Ajith, say sources. If Ajith’s salary is paid inclusive of income tax, then the budget of the film would hit the roof.

Is Ajith’s call sheet is a blessing or a curse? Only time will say!

Read previous post:
தலைவா நஷ்டம்…. திருப்பிக் கொடுத்தார் விஜய்!

‘தலைவா’ படம் நஷ்டம். அந்த நஷ்டத்தை சரி செய்துவிட்டு ஜில்லாவை வெளியிடுங்கள் என்று அந்த நேரத்தில் அராத்து பண்ணிய அத்தனை பேரிடமும், ‘கணக்கு வழக்குகளை முறையா கொண்டு...

Close