அஜீத் சார் புண்ணியத்துல எங்க குடும்பம் சேர்ந்தது… ‘வீரம்’ தம்பிகளில் ஒருவரான பாலா பேட்டி

வீரம் படத்தில் அஜீத்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருக்கும் பாலா, கேரளாவில் முக்கியமான ஸ்டார்களில் ஒருவர். சுமார் நாற்பது படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது முதல் படம் தமிழ்தான். அவரும் தமிழர்தான். அதையும் தாண்டி இன்னொரு தகவல்… வீரம் படத்தின் இயக்குனரான சிவாவின் ஒரே ஒரு உடன் பிறந்த தம்பியும் ஆவார். இவரது அக்கா சீனாவில் இருக்கிறார். பிளாக் அண் ஒயிட் காலத்திலிருந்து, சற்று முற்பட்ட காலம் வரைக்கும் இவரது குடும்பத்துக்கு சொந்தமான அருணாசலம் ஸ்டுடியோ சென்னையில் புகழ் பெற்ற ஷுட்டிங் ஸ்பாட்டுகளில் ஒன்றும் கூட. இவரது தாத்தா பிரபலமான சினிமா தயாரிப்பாளர். பில்டிங்கை இவ்வளவு ஸ்டிராங்காக வைத்திருந்தாலும், அவரது ஆரம்பகால பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்தான். அவர் அறிமுகமான முதல் தமிழ் படம் ‘அன்பு’க்கு ரசிகர்கள் யாரும் அன்பு காட்டவில்லை.

அதற்கப்புறமும் நாலைந்து தமிழ் படங்களில் நடித்தவர், ஒரு மலையாள படத்தில் மம்முட்டிக்கு தம்பியாக நடிக்க, பிய்த்துக் கொண்டது மார்க்கெட். ‘பொதுவா மலையாளிகள் வேறு லாங்குவேஜ் நடிகர்களை அங்கு பெரிய அளவுக்கு வளர்த்து அழகு பார்ப்பதில்லை. ஆனா என்னை பெரிய ஹீரோவாக்குனாங்க. தொடர்ந்து அங்கு பிசியான ஹீரோவா இருக்கேன். என் சொந்த அண்ணன் சிவா, தமிழில் கேமிராமேனாக அறிமுகம் ஆகி, அதற்கப்புறம் தெலுங்கில் ஒரு படம் இயக்கினார். அது சூப்பர் ஹிட். அவரும் ஐதரபாத்திலேயே செட்டில் ஆகிட்டார்’ என்று பேச ஆரம்பிக்கிறார் பாலா.

‘ஆனால் எங்க ரெண்டு பேருக்குமே சொந்த தாய்மொழியான தமிழில் ஜெயிக்க முடியலே என்கிற ஏக்கம் இருந்துகிட்டேயிருந்துச்சு. அப்புறம் அவருக்கு சிறுத்தை ஹிட்டாச்சு. இப்போது வீரம். இந்த படத்துல அஜீத்துக்கு தம்பியா நடிக்கணும். வர்றீயா என்று அவர் கேட்டவுடன் எனக்கு ஒரே ஆனந்தம். சட்டுன்னு வந்துட்டேன். இந்த படத்தை பார்க்கறதுக்காகவே சீனாவுல செட்டில் ஆகிட்ட என் அக்கா வந்திருந்தாங்க. பல வருஷம் கழிச்சு எங்க குடும்பம் ஒண்ணு சேர்ந்து இருக்கோம். நேற்று இரவு ஐந்து மணி வரை ஒரே அரட்டையடிச்சுட்டு விடியற்காலைதான் உறங்கவே போனோம். வீரம் படம்தான் தனித்தனியா இருந்த எங்களை இவ்வளவு கால பரபரப்புக்கு பிறகு ஒன்று சேர்த்திருக்கு. அதற்காக அஜீத் சாருக்கு நன்றி சொல்லணும் என்கிறார் பாலா.

நடிப்புக்கு ஹோப் உள்ள கேரக்டரா இருந்தா தமிழ்ல வில்லனா நடிக்க கூட நான் தயாரா இருக்கேன். அதுவும் அஜீத் சார் படத்தில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சா நான் லக்கி. ஏன்னா தாய் மொழியில் ஜெயிக்கணும். அதுதான் இனிப்பையெல்லாம் விட பெரிய இனிப்பு என்கிற பாலாவுக்கு அஜீத் ரசிகர்கள் சார்பில் ஒரு மிட்டாய் ஷாப்பையே எழுதிக் கொடுக்கலாம்.

Thanks to Ajith sir, our family got united after a long time – Bala

Bala, blood brother of director Siva, was cast as one of the brothers for Ajith in Veeram. Bala though a Tamil linguistic has made Kerala as his second home, since he was very popular star there having acted in over 40 films. He started with a Tamil film Anbu, but it did not go well at the box office and his trials after that went futile in Kollywood. He relocated to Kerala, and become popular after playing a brother to Mammooty in one of his films. After that there was no turning back.

Getting the role in Veeram itself was an interesting one. Director Siva was selecting the cast for 4 brothers in consultation with Ajith, to whom he had shown the photograph of Bala. However he did not reveal to him that Bala was his blood brother to Ajith since he wanted his brother to come up on his own without any recommendation. Impressed Ajith asked Siva to get Bala meet him. Once they met and discussed about the role, Ajith was convinced and told Siva to cast Bala as one of his brothers in the film. Only then did Siva reveal to Ajith that Bala was his own blood brother. Surprised Ajith congratulated Bala for his straightforwardness and offered his wishes to Bala.

Bala says that because of work his brother Siva and he lived separately in Hyderabad/Chennai and he at Cochin/Trivandrum. Their only sister is married and settled in China. Though they are very affluent family they are living according to their work requirements. When they informed their sister about Veeram, she also got thrilled and came all the way from China and watched the film with us. After a very long time the siblings have united, thanks to Ajith Sir, says Bala.

His only wish is to establish himself as a popular actor in Tamil his native language, even if it is a negative role, but with plenty of opportunities to express himself in the role. We too wish him that his dream and wish would be fulfilled soon!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யாவின் அஞ்சான் படத்தில் லிங்குசாமியும் நடிக்கிறாராம்….

ஹீரோ ஊர்ல இல்லாத சமயமா பார்த்து உள்ளே என்ட்ரி கொடுத்து, ரசிக மஹா சனங்களையெல்லாம் பீதிக்குள்ளாக்கிய பேரரசு மாதிரியில்லை லிங்குசாமி. அவரை நம்பி கால்ஷீட் கொடுக்கலாம். ஹீரோக்களின்...

Close