அஜீத் படத்திற்கு முட்டுக்கட்டை? -கைகொடுக்க வந்த VIP
‘அஜீத்தின் ஆரம்பம் தீபாவளிக்கு வந்துவிடும்…’ ரசிகர்களின் கோலாகலக் கனவாக இந்த தேவ செய்தி இருக்க, இன்னும் படத்திற்கு ஆடியோ ரிலீஸ் விழாவை கூட ஏற்பாடு செய்யவில்லை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இந்த விழாவுக்கு அஜீத் வரப்போவதில்லை என்பதால்தான் இப்படியொரு மெத்தனம். ‘நான் வராட்டி என்ன? நீங்களா ரிலீஸ் பண்ணிட வேண்டியதுதானே’ என்றாராம் அவர்.
தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிற நிலையில் படத்தை ரிலீஸ் செய்கிற வேலையில் பரபரப்பாக இருக்கிறார் ரத்னம். ஆனால் அவர் சொல்கிற விலையை கேட்டு தடுமாறிப் போயிருக்கிறதாம் விநியோகஸ்தர் வட்டாரம். NSC ஏரியா பதினாலு கோடி, MR என்று அழைக்கப்படும் மதுரை ராமநாதபுரம் ஏரியா பத்து கோடி என்று தாறுமாறாக இருக்கிறதாம் விலை.
இதற்கிடையில் சுமார் 300 தியேட்டர்களுக்கு மேல் காம்பளக்ஸ் தியேட்டராக பிடித்துக் கொண்டார் ஞானவேல்ராஜா. இது ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்காக. இவை போக மீதமிருப்பவை அவ்வளவு தரமான தியேட்டர்களாகவும் இல்லை. இவ்வளவு குளறுபடிகள் இருந்தாலும், ஆறுதலாக ஒருவர் தோள் கொடுத்திருக்கிறார் ரத்னத்திற்கு.
உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் முக்கியஸ்தரான செண்பகமூர்த்திதானாம் அவர். இவர் உள்ளே என்ட்ரி கொடுத்த பின் எல்லாமே துரிதமாக நடப்பதாக கேள்வி. இந்த தீபாவளியை விட்டால் பட்டாசு பரபரப்போடு அஜீத்தை திரைக்கு கொண்டுவர பொறுத்தமான நாள் வேறு இருப்பதாக தெரியவே இல்லை.
ஜல்தி தலைவா ஜல்தி…
Behind the Scene Act by a VIP helping Arrambam for smooth release!
While Thala Ajith’s fans, the trade, the distibutors and the public are awaiting the release of his much talked about film Arrambam. Arrambam though a nice title, has not begun smoothly, and it goes the same way even now, facing hurdle after hurdle. The title of the film itself was a big mystery which was revealed after many serious contemplation. Now, the trailer launched, the audio launched (though in a subdued way, direct to the stores), there was a thunderous response to them from across all the platform, be it social media, online sites, TV channels, or the press. There were specualations if the film at all be released on Diwali, as there were rumours that no theatres worth of its name was available to the film, as Studio Green Gnanavel Raja blocked most of the multiplexes. Producer AM Rathnam was a confused man, as he could not properly concentrate on negotiating the distribution price which was hitting the roof, as we hear from trade sources. But now the producer appears to be on a solid wicket, as he is being helped by a solid partner to bat with. It is none other than Udhayanidhi Stalin who is helping Rathnam to sort out all the issues, to make a smooth beginning for Arrambam. So now all is set for Thala to hit the bull’s eye. Hope he would!!!